போப்பின் மரணத்தை 1500களில் வாழ்ந்த நாஸ்ட்ரடாமஸ் கணித்துள்ள தகவல்கள் தற்போது பெரும் வைரலாகி வருகின்றன.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்து வந்தவர் போப் பிரான்சிஸ் (வயது 88). இவருக்கு கடந்த பிப்ரவரி 14-ம் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவருக்கு சுவாச குழாயில் பாதிப்பு ஏற்பட்டது.
மருத்துவமனையில் 5 வாரங்களுக்குமேலாக சிகிச்சையில் இருந்து போப் பிரான்சிஸ் உடல்நலம் தேறிய நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு டிஜ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில், இன்று காலை வாடிகனில் உள்ள தனது இல்லத்தில் காலமானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காலை 7.35 மணிக்கு போப் பிரான்சிஸ் உயிர் பிரிந்ததாக வாடிகன் தெரிவித்து உள்ளது.
உண்மையான நாஸ்ட்ரடாமஸ் கணிப்பு: நாஸ்ட்ரடாமஸ் உலக நிகழ்வுகள் குறித்த கணிப்புகளை தனது லெஸ் ப்ரொபீடீஸ் என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் உலகின் சக்தி வாய்ந்த நாடுகள், இயற்கை பேரிடர்கள், தொற்று நோய், போர்கள், உலக தலைவர்கள் படுகொலை உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிகழ்வுகள் குறித்து துல்லியமாக கணித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் போப்பின் மரணத்தை 1500களில் வாழ்ந்த நாஸ்ட்ரடாமஸ் கணித்துள்ள தகவல்கள் தற்போது பெரும் வைரலாகி வருகின்றன. அதாவது உலகின் மிக வயதானதொரு போப் மரணம் அடைந்த பின் குறைந்த வயதுடைய ஒரு ரோமன் அடுத்த போப் ஆக தேர்ந்தெடுக்கப்படுவார் என கணித்துள்ளதாக கூறப்படுகிறது.
அவர் அந்த பொறுப்பில் நெடுங்காலம் இருப்பார் என்றும் அதிக ஈடுபாட்டுடன் அவர் சேவையாற்றுவார் என்றும் நாஸ்ட்ரடாமஸ் கணித்துள்ளார்.
2025 குறித்து பாபா வங்கா – நாஸ்ட்ரடாமஸின் ஆச்சர்யமூட்டும் கணிப்புகள்:
பாபா வங்காவும் மற்றும் நாஸ்ட்ரடாமஸும் வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்தவர்களானாலும், 2025 ஆம் ஆண்டைக்குறித்து ஒரே விதமாக கணித்துள்ள விடயம் வியப்பை உருவாக்கியுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான பாபா வங்கா கணிப்பில் ஐரோப்பாவை பேரழிவை ஏற்படுத்தும் ஒரு போர் நடைபெறும். இது, கண்டத்தின் மக்கள்தொகையை அழிக்கும். மேலும், ரஷ்யா உலகில் ஆதிக்கம் செலுத்தும் என்று அவர் கணித்தார். பாபா வாங்காவின் தீர்க்கதரிசனங்கள், அமெரிக்க மேற்கு கடற்கரையில் நிலநடுக்கங்கள் மற்றும் செயலற்ற எரிமலைகள் வெடிப்பது உட்பட தொடர்ச்சியான பேரழிவு இயற்கை பேரழிவுகள் ஏற்படலாம் என்றும் கணித்துள்ளார்
அதேபோல் புகழ்பெற்ற பிரெஞ்சு ஜோதிடரும் மருத்துவருமான நாஸ்ட்ராடாமஸ் 16 ஆம் நூற்றாண்டின் புத்தகமான Les Prophies இல் பல அச்சுறுத்தும் தீர்க்கதரிசனங்களை எழுதி உள்ளார். ஐரோப்பா அதன் எல்லைகளுக்குள் இருந்து நடக்கும் போரில் சிக்கிக் கொள்ளும், உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் எதிரிகளை வளர்வார்கள் என்றும் அவர் கணித்துள்ளார்..
2025 ஆம் ஆண்டிற்கான நோஸ்ட்ராடாமஸின் கணிப்புகள் குறிப்பாக பயங்கரமானவை, பேரழிவுகரமான மோதல், மிகப்பெரிய கொள்ளை திரும்பி வரும் என்றும் அவர் கணித்துள்ளார். மற்ற நோய்களை போல் அல்லாமல் அது ஒரு கொடிய எதிரி என்றும் அவர் எச்சரித்துள்ளார்.