அண்மையில் சாட் ஜிபிடி அறிமுகம் செய்த Ghibli, டிரெண்டிங் ஆன நிலையில், தற்போது சாட்ஜிபிடியே பெரும் சிக்கலுக்கு ஆளாகியிருக்கிறது.
பல அனிமேஷன் தொடர்களுக்கு புகழ்போன நாடு ஜப்பான். இன்றைய தலைமுறையினர் மத்தியில் பிரபலமாக இருக்கும் நருடோ வகை அனிமேஷன்கள் போல, புகழ்பெற்ற ஒரு அனிமேஷ் ஸ்டைல் தான் ஜிப்லி (Ghibli). ஜப்பானிய இயக்குநர் ஹாயாவோ மியாஸாகி இந்த அனிமேஷன் ஸ்டைலை பயண்படுத்தி பல புகழ்பெற்ற படங்களை இயக்கியுள்ளார். ஒவ்வொரு காட்சிகளையும் கைப்பட வரைந்து பின் இந்த இமேஜ்கள் காட்சிகளாக உயிர்கொடுக்கப்படுகின்றன.
அந்த வகையில், சமீபத்தில் Ghibli என்ற புதிய போட்டோ பில்டர் அம்சத்தை சாட் ஜிபிடி அறிமுகம் செய்தது. பயனாளர்கள் தங்கள் புகைப்படங்களை அப்லோடு செய்து, Ghibli செய்து கேட்டால், அது அந்த அனிமேஷன் பாணியில் போட்டோக்களை மாற்றி தருகிறது. ஆனால், இது உலகளவில் பிரபலம் ஆனதால், ஏராளமான இணையவாசிகள் சாட்ஜிபிடிக்குள் புகுந்து தங்கள் புகைப்படங்களை Ghibli போல் மாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் தான், இதுதொடர்பாக பதிவிட்டுள்ள சாட்ஜிபிடியின் நிறுவனர் சாம் ஆல்ட்மேன், ”புகைப்படங்களை ஏராளமான பயனர்கள் கிப்ளிஃபை செய்து வருவதால் சாட்ஜிபிடி சர்வர்கள் ஓவர்லோட் ஆகியுள்ளது. மேலும், ஜிபியு (Graphics Processing Unit) உருகுவதாகவும், கிப்ளிஃபை செய்வதை குறைத்துக் கொள்ளுங்கள்” என்றும் பயனாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.