விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
இதுதொடர்பான வீடியோவில், நிக்சன் மாயாவிடம் ரொம்ப பேக்காக இருக்கிறா, என் மூஞ்சிலையே முழிக்காத என்று ஐஷூ சொல்லிட்டாள். ஒன்றுமே இல்லை என்றால் எதுக்காக இவ்வளவு பேசுறாள் என்று கேட்கிறார்.
அதற்கு மாயா, நீ அவளை லவ் பண்ணுறியா என்று கேட்க, அதற்கு நிக்சன் இல்லை என்று சொல்கிறார். அப்படினா, அதை நீ பெருசாக்கிக்காத என்று சொல்கிறார். அதே போல ஐஸ்வர்யாவிடமும் சென்று நீ அவனை லவ் பண்ணுறியா என்று கேட்க அவரும் இல்லை என்று சொல்ல அப்படினா ப்ரீயா விடு. அவனும் உன்ன லவ் பண்ணலையாம் என்கிறார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகிறது.