பிரசவத்திற்கு பிறகு ஏற்படுகின்ற அசதி மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் ஆகியவை காரணமாக மன அழுத்தம் உண்டாகும்.
புதிய தாய்மார்கள் அன்றாட வாழ்க்கை பணிகளை சௌகரியமாக மேற்கொள்ள முடியாது. உதாரணத்திற்கு ஆரோக்கியமான உணவை சாப்பிட முடியாது மற்றும் முறையான தூக்கம் இருக்காது. இதன் காரணமாகவும் மன அழுத்தம் உண்டாகலாம். பிரசவித்த தாய்மார்களுக்கு அவர்களது கணவன் அல்லது குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து போதுமான ஆதரவு மற்றும் உதவி ஆகியவை கிடைக்க வேண்டும். இவை கிடைக்காமல் தனி ஒரு ஆளாக தடுமாறும் பட்சத்தில் அதனால் மன அழுத்தம் உண்டாகும். தாய்மார்கள் எடுத்துக்கொள்ளும் சில வகை மருந்துகள் காரணமாக தாய்ப்பால் ஊட்டுவதில் சிரமம் ஏற்படலாம். இது அவர்களுக்கு குற்ற உணர்வை ஏற்படுத்தி மன உளைச்சலை உண்டாக்கும்.
குழந்தையை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும், நேரா நேரத்திற்கு தாய்ப்பால் ஊட்ட வேண்டும் என்று சுற்றியுள்ள சமூகத்திடம் இருந்து தாய்மார்களுக்கு கொடுக்கப்படுகின்ற நெருக்கடி காரணமாகவும் மன அழுத்தம் ஏற்படலாம். தாய்ப்பால் ஊட்டுவதில் பிற தாய்மார்களுடன் ஒப்பிட்டு பேசுவதன் காரணமாகவும் இந்த நிலைக்கு தாய்மார்கள் தள்ளப்படுவார்கள். ஒவ்வொரு தாய்மார்களின் திறன் மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றை சார்ந்த தாய்ப்பால் சுரப்பு இருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.