இந்தியாவின் பிரபல பங்குச் சந்தை மற்றும் நிதிச் சேவை நிறுவனமான ஜீரோதாவின் இணை நிறுவனர் நிகில் காமத், பரம்பரை சொத்துகளை பராமரிக்க வாரிசு தேவையில்லை என்று தான் நினைத்ததால் தனக்கு குழந்தை தேவையில்லை எனக் கூறியிருக்கிறார்.
சமீபத்தில் பாட்காஸ்ட் ஒன்றில் அவர் பேசியுள்ளது வைரலாகி உள்ளது. அவர் கூறுகையில், “எனக்கு வயதாகும்போது என்னுடைய குழந்தைகள் என்னை நன்றாகப் பார்த்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் என் வாழ்வின் 18 முதல் 20 வருடங்களைக் குழந்தையைப் பார்த்துக்கொள்வதற்காக செலவழிக்க நான் விரும்பவில்லை.
கிரகத்தில் உள்ள மற்ற எல்லா விலங்குகளையும் போல நீங்கள் பிறந்து இறக்கிறீர்கள். நீங்கள் இறந்துவிட்டீர்கள் என்றால் உங்களை யாரும் நினைவில் வைத்துக்கொள்ளப் போவதில்லை. இறந்த பிறகு நினைவில் இருப்பதில் என்ன பிரயோஜனம்..? நீங்கள் பிறக்க வேண்டும், நன்றாக வாழ வேண்டும், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் நபர்களுடன் இனிமையாகப் பழக வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது.
வங்கிகளில் பணத்தை வைப்பதில் எந்த மதிப்பும் இல்லை… அதனால் நான் நம்பும் விஷயங்களுக்காக அதைக் கொடுப்பேன். கடந்த 20 வருடங்களில் நான் சம்பாதித்த பணத்தையும், அடுத்த 20 ஆண்டுகளில் நான் சம்பாதிப்பதையும் ஒரு வங்கி அல்லது நிறுவனத்தில் விட்டுவிடாமல், அதை மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்வேன்” என்று கூறியுள்ளார்.
ஐஸ்வர்யா ராய்-க்கு என்ன ஆச்சு? கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்பு!