விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.
இவ்வாறான நிலையில், இந்த வாரம் விணுஷா தான் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப்போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த வாரம் நாமினேஷனில் 11 போட்டியாளர்கள் உள்ளனர். இதில், அதிக வாக்குகளை பெற்று பிரதீப் டாப் லிஸ்டில் இருக்கிறார். அவரை தொடர்ந்து நிக்ஸன், மணிகண்டன், விஷ்ணு, ஜோவிகா, அக்ஷயா, மாயா போன்ற போட்டியாளர்களும் இடத்தில் உள்ளனர். இறுதியாக கூல் சுரேஷ், யுகேந்திரன், விக்ரம், வினுஷா ஆகியோர்கள் இறுதி 4 இடத்தில் உள்ளனர்.
எனவே, இந்த வாரம் பாரதிக்கண்ணமா சீரியல் நடிகை வினுஷா மிகவும் குறைவான வாக்குகளை பெற்ற நிலையில், இவர் வெளியேறினால் நன்றாக இருக்கும் என மக்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு தான் பிக்பாஸ் வீட்டை விட்டு செல்ல வேண்டும் என வினுஷா அழுது கொண்டிருந்தார். ஆகவே, இவர் வெளியேறுவதுதான் சரி. எனவே, இந்த வாரம் வினுஷா வெளியேறுவது தான் உறுதி என கூறுகின்றனர்.