அதிமுக பொதுக்குழு செல்லாது என்று உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து இ.பி.எஸ் தரப்பு இன்று மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.. இந்த நிலையில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வந்த ஓபிஎஸ்-க்கு சாதகமாக நேற்று ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது.. ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொது குழு செல்லாது என்றும் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது எனறும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.. மேலும் ஜூன் 23-க்கு முன்பு இருந்த நிலையே தொடரும் என நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
இதன் காரணமாக அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சியில் இருந்தாலும் அடுத்த கட்டமாக சட்ட ரீதியாக மேல்முறையீடு செய்வார்கள் என்று கூறப்படுகிறது.. மறுபுறம் ஓபிஎஸ் தரப்பு மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறது. எனினும் தற்காலிக வெற்றி தான் என்று இபிஎஸ் தரப்பு தெரிவிக்கின்றது..
இந்த தீர்ப்பு காரணமாக அதிமுகவில் இபிஎஸ் தனியாக முடிவு எடுக்க முடியாது நிலை ஏற்பட்டுள்ளது.. இதன் காரணமாக அதிமுகவில் அணிகள் மாற வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் சிலர் எடப்பாடி பக்கத்தில் இருந்து ஓபிஎஸ் பக்கம் செல்ல அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது..
இந்நிலையில் அதிமுக பொதுக்குழு செல்லாது என்று உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து இ.பி.எஸ் தரப்பு இன்று மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சட்ட வல்லுனர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்றே அவர் தரப்பில் மேல்முறையீடு செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..