இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 21,413 காலி பணியிடங்களை நிரப்புவதற்கானஅறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 2,292 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
காலி பணியிடங்கள்: Gramin Dak Sevaks (GDS), Branch Postmaster (BPM), and Assistant Branch Postmaster (ABPM) எனமொத்தம் 21,413 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கல்வி தகுதி: இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயதுவரம்பு: இதற்கு 18 வயதில் இருந்து 40 வயதுக்குள் இருப்பவர்கள்விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: Assistant branch post master பதவிகளுக்கு ரூ. 10,000 முதல் ரூ. 24,470 வரையும்,Branch post master பதவிகளுக்கு ரூ. 12,000 முதல் ரூ. 29,380 வரை சம்பளமாக வழங்கப்படுகிறது.
வயதுவரம்பு தளர்வுகள்: இதில் SC/ST பிரிவினர்களுக்கு ஐந்து ஆண்டுகள், OBC பிரிவினர்களுக்கு மூன்று ஆண்டுகள், PWD பிரிவினர்களுக்கு 10 ஆண்டுகள்,PwD மற்றும் OBC பிரிவினர்களுக்கு 13 ஆண்டுகள், PwD மற்றும் SC/ST பிரிவினர்களுக்கு 15 ஆண்டுகள் என வயதுவரம்பில் தளர்வுகள் அளிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை: இதில் விண்ணப்பிப்பதற்கு https://indiapostgdsonline.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம்: இதற்கு விண்ணப்ப கட்டணமாக 100 ரூபாய் செலுத்த வேண்டும். SC, ST, PWD, பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு விண்ணப்ப கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
கடைசி தேதி : மார்ச் 3 ஆம் தேதி விண்ணப்பிப்பதற்கு கடைசி தேதி ஆகும்.