fbpx

வாகன ஓட்டிகளே இனி இதை எல்லாம் கட்டாயம் எடுத்து செல்ல வேண்டும்…! மத்திய போக்குவரத்து துறை அறிவிப்பு…!

இந்தியாவிற்குள் வரும் போக்குவரத்து அல்லாத மோட்டார் வாகனங்களுக்கான இந்திய விதிமுறைகள் 2022-ஐ மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்துத் துறை அமைச்சகம் 02.09.2022 அன்று அறிவிக்கையாக வெளியிட்டுள்ளது. வெளிநாடுகளில் பதிவு செய்யப்பட்ட தனிநபர் வாகனங்கள் இந்தியாவிற்குள் நுழையும் போது இந்த விதிமுறைகள் பொருந்தும்.

இந்த விதிமுறைகளின்படி, நாட்டில் தங்கியிருக்கும் போது செல்லுபடியாக கூடிய பதிவுச் சான்றிதழ், செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் அல்லது சர்வதேச ஓட்டுநர் உரிமம், காப்பீட்டு வாகனம், மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ் அனைத்தும் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

ஆங்கிலம் தவிர மற்ற மொழிகளில் இருந்தால் அதன் அங்கீகரிக்கப்பட்ட மொழியாக்கத்துடன் கூடிய ஆவணங்களை அசல் ஆவணங்களுடன் வைத்திருக்க வேண்டும்.இந்தியா தவிர மற்ற நாடுகளில் மோட்டார் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தால் அவை இந்தியாவிற்குள் உள்ளூர் பயணிகளையோ சரக்குகளையோ ஏற்றிச் செல்ல அனுமதியில்லை.

Vignesh

Next Post

’கேட்ச்சை தவறவிட்ட சிராஜ், ருதுராஜ்’..!! மில்லர் சிக்ஸில் பாடம் கற்பித்த Ball Boy..!! வைரல் வீடியோ உள்ளே..!!

Fri Oct 7 , 2022
மில்லர் அடித்த சிக்ஸரை மிட் விக்கெட்டில் நின்றிருந்த பால் பாய் அசால்ட்டாக கேட்ச் பிடித்து அசத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி, மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் பங்குபெற்று விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி, முதன்முதலில் சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை […]
’கேட்ச்சை தவறவிட்ட சிராஜ், ருதுராஜ்’..!! மில்லர் சிக்ஸில் பாடம் கற்பித்த Ball Boy..!! வைரல் வீடியோ உள்ளே..!!

You May Like