fbpx

2024ஆம் ஆண்டின் பொது விடுமுறை நாட்கள் அறிவிப்பு..!! தமிழ்நாடு அரசு வெளியிட்ட லிஸ்ட் இதோ..!!

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா இ.ஆ.ப. வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2024ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி ஆங்கில புத்தாண்டு, ஜனவரி 15ஆம் தேதி பொங்கல், ஜனவரி 16ஆம் தேதி திருவள்ளூவர் தினம், ஜனவரி 17ஆம் தேதி உழவர் திருநாள், ஜனவரி 25ஆம் தேதி தைப்பூசம், ஜனவரி 26ஆம் தேதி குடியரசுத் தினம் ஆகிய நாட்கள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 29ஆம் தேதி புனித வெள்ளி, ஏப்ரல் 01ஆம் தேதி வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு, ஏப்ரல் 09ஆம் தேதி தெலுங்கு வருட பிறப்பு, ஏப்ரல் 11ஆம் தேதி ரம்ஜான், ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு, ஏப்ரல் 21மகாவீர் ஜெயந்தி, மே 1ஆம் தேதி மே தினம், ஜூன் 17ஆம் தெத்து பக்ரீத் தினம், ஜூலை 17ஆம் தேதி மொஹரம் பண்டிகை, ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம், ஆகஸ்ட் 26ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி ஆகிய நாட்கள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், செப்டம்பர் 7ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி, செப்டம்பர் 16ஆம் தேதி மிலாது நபி, அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி, அக்டோபர் 11ஆம் தேதி ஆயுதபூஜை, அக்டோபர் 12ஆம் தேதி விஜயதசமி, அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி, டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் ஆகிய நாட்கள் அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

பாலியல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சிக்கிக்கொண்ட ஆசிரியர்..!! கூட்டமாக வந்த மாணவிகள்..!! பதறிய போலீஸ் அதிகாரி..!!

Fri Nov 10 , 2023
நெல்லை மாநகராட்சி பகுதியில் கல்லணை பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், கடந்த 8ஆம் தேதி நெல்லை மாநகர காவல்துறை சார்பில், அப்பள்ளியில் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. அப்போது நிகழ்ச்சி முடிவில் தனியாக வந்த பத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் அங்குள்ள காவல்துறை உயர் அதிகாரியிடம் அப்பள்ளியை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தங்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வருவதாகவும், […]

You May Like