ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான தேர்வு, 2022-க்கான அறிவிக்கையை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசியலமைப்பு சட்ட ரீதியிலான, சட்டபூர்வ ரீதியிலான அமைப்புகள், தீர்ப்பாயங்களில் குரூப்-பி மற்றும் குரூப் –சி காலிபணியிடங்களை நிரப்புவதற்காக வெளிப்படையான வகையில் போட்டித் தேர்வை ஆணையம் நடத்தவுள்ளது.
பணி விவரங்கள், வயது வரம்பு, தேவையான கல்வித் தகுதி, தேர்வுகட்டணம், தேர்வுமுறை, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்டவை தொடர்பான விவரங்கள், பணியாளர் தேர்வு அறிவிக்கையில், தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை ஆணையத்தின் இணையதளமான https://ssc.nic.in/ என்ற முகவரில் ஆன்லைன் மூலம் மட்டுமே அளிக்கவேண்டும். விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 08.10.2022 ஆகும். இணையதளம் மூலம் தேர்வு கட்டணத்தை செலுத்த கடைசி நாள் 09.10.2022 என தெரிவிக்கப்பட்டுள்ளது .