fbpx

குட் நியூஸ்…! அரசு மருத்துவ மருத்துவமனையில் இனி 3 ஷிப்ட் வேலை‌…! தமிழக அரசு அரசாணை…!

அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் ஆரம்பச் சுகாதார நிலையங்களில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்களுக்கு 3 ஷிப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்கீடு செய்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசாணையில்; சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பின் அடிப்படையில், மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறையின் கீழ்வரும் அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் செவிலிய உதவியாளர் தரம்-2 மற்றும் கடைநிலை ஊழியர்களான மருத்துவமனை பணியாளர் மற்றும் துப்புறவு பணியாளர்களுக்கு (D Grade Employees) கீழ்க்காணுமாறு பணி நேரம் நிர்ணயித்து ஆணை வெளியிட உத்தேசித்து, அவ்வாறே ஆணையிடுகிறது.

அதன் படி, காலை 6 மணி முதல் மணி 1 மணி வரை, மதியம் 1 மணி முதல் இரவு 9 மணி வரை, இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை என 3 ஷிப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் ஆரம்பச் சுகாதார நிலையங்களில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்களுக்கு 3 ஷிப்ட் அடிப்படையில் பணி நேரம் கடைபிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

புற்றுநோய்க்கு சுயமாக மருத்துவம்..!! மரணம் வரை சென்று திரும்பிய மருத்துவர்..!! அப்படி என்ன சிகிச்சை..?

Sat May 18 , 2024
ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் மருத்துவ பேராசிரியர் ரிச்சர்ட் ஸ்கோலியர். இவர், கடந்தாண்டு போலந்தில் இவர் வசித்து வந்தபோது 57 வயதில் 4-ம் நிலை மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தது. இந்தப் புற்றுநோயால் 12 மாதங்கள் வரை மட்டுமே உயிர் வாழ முடியும் என்று கூறப்படுகிறது. ஆனால், இவர் தனது சொந்த ஆராய்ச்சியின் அடிப்படையில் ஓர் அற்புதமான சுய சிகிச்சையை மேற்கொண்டு புற்றுநோயில் இருந்து மீண்டுள்ளார். அதாவது, மெலனோமா (Melanoma) எனும் தோல் […]

You May Like