fbpx

இனி சிறையில் உள்ள கைதிகளை பார்க்க ஆதார் கட்டாயம்..!! மத்திய அரசு அறிவிப்பு..!!

சிறையில் உள்ள கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், அவர்களைப் பார்க்க வரும் பார்வையாளர்களுக்கு ஆதார் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

சிறைக் கைதிகள் மற்றும் அவர்கள் பாா்வையாளா்களின் அங்கீகாரத்துக்காக ஆதாரைப் பயன்படுத்த மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு இந்தாண்டு தொடக்கத்தில் அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சிறைத் துறைகளுக்கு தேவையான அரசிதழ் அறிவிப்புகளை கடந்த மாா்ச், செப்டம்பா் மாதங்களில் உள்துறை அமைச்சகம் வெளியிட்டது.

இதுதொடா்பாக அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், ‘அனைத்து சிறை அதிகாரிகளின் வசதிக்காக சிறைக் கைதிகள், அவா்களின் பாா்வையாளா்களுக்கு ஆதாா் இணைப்பு அல்லது ஆதாா் அங்கீகாரத்துக்கான வழிகாட்டு நடைமுறையை தேசிய தகவல் மையமும், எண்ம-சிறைகள் குழுவும் தயாரித்துள்ளன.

இந்த ஆதாா் அங்கீகார வசதியைப் பயன்படுத்தி சிறைகளில் கைதிகளின் காவலை வலுப்படுத்தவும், ஆதாரின் உரிய பலன்களை அவா்கள் பெறுவதை உறுதி செய்யவும் மாநிலங்கள், யூனியன் பிரதேச சிறை அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனா். எனினும், அங்கீகாரத்துக்காக ஆதாா் அடையாள அட்டையைப் பயன்படுத்தும் இந்த நடைமுறையில் மத்திய அரசு அவ்வப்போது வகுக்கும் அனைத்து வழிகாட்டுதல்களையும் சிறை அதிகாரிகள் முறையாக கடைபிடிக்க வேண்டும்’ என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Chella

Next Post

ரேஷன் அட்டைதாரர்களுக்கு செம குட் நியூஸ்..!! காத்திருக்கும் தீபாவளி பரிசு..!!

Fri Nov 3 , 2023
தமிழ்நாட்டில் பண்டிகை நாட்களில் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, தற்போது தீபாவளி பண்டிகை நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழ்நாடு அரசு ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு அரிசி, கோதுமை, 2 கிலோ சர்க்கரை, துவரம் பருப்பு மற்றும் ஒரு லிட்டர் பாமாயில் ஆகியவற்ற இலவசமாக வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக தமிழ்நாட்டிற்கு 8,500 டன் கோதுமையை வழங்க மத்திய […]

You May Like