fbpx

”இனி அனைத்திற்கும் பிறப்புச் சான்றிதழ் மட்டும் போதும்”..!! அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமல்..!!

பிறப்பு சான்றிதழை ஒரே ஆவணமாக பயன்படுத்தும் நடைமுறை அக். 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

பல்வேறு வகையான இந்திய அரசின் ஆவணங்களை பெறுவதற்கான ஒற்றை ஆவணமாக பிறப்புச் சான்றிதழை பயன்படுத்தலாம் என்ற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. நாட்டில் பல்வேறு வகையான அடையாளச் சான்றிதழ் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் போன்றவை கூடுதல் முக்கியத்துவம் உள்ள ஆவணங்களாக கருதப்படுகின்றன.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்தராய் பிறப்புச் சான்றிதழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் ஆகஸ்ட் 1ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மூலம், கல்வி நிலையங்களில் சேர்வது, வாகன ஓட்டுனர் உரிமம் பெறுவது, ஆதார் கார்டு பெறுவது, வாக்காளர் அடையாள அட்டைக்கு பயன்படுத்துவது, திருமண பதிவு போன்ற அனைத்து வகையான ஆவணங்களையும் பெறுவதற்கு பிறப்புச் சான்றிதழை ஒற்றைச் சான்றாக எடுத்துக் கொள்ளும் நடைமுறை இந்த மசோதா மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும், பிறப்பு சான்றிதழ் பெறுவது எளிதாக்கப்பட்டு இருப்பதாகவும், இணைய வழியாக பிறப்பு இறப்பு பதிவுகளை எண் பதிவு மூலம் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு பிறப்பு இறப்புச் சான்றிதழ்களை கண்காணிப்பதற்காக மத்திய, மாநில அரசுகளால் வலிமையான தரவு தளம் ஏற்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் பிறப்புச் சான்றிதழ் பெறுவதற்கான நடைமுறைகள் எளிதாக்கப்படும் என்றும் இந்த தரவு தளத்தை பாதுகாக்கவும், புதுப்பிக்கவும், கண்காணிக்கவும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் இதன் மூலம் மக்களுக்கான சேவை உறுதி செய்யப்படும் என்றும் இந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Chella

Next Post

”நீயெல்லாம் மீசை வெச்ச ஆம்பளையா”..? பயம் வந்துருச்சா..? சீமானை வெளுத்து வாங்கிய வீரலட்சுமி..!!

Thu Sep 14 , 2023
“சீமான் மீசை வெச்ச ஆம்பளையாக இருந்தால் விசாரணைக்கு ஆஜராக வேண்டியது தானே” என தமிழர் முன்னேற்றப்படையின் தலைவர் வீரலட்சுமி விளாசியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அளித்த புகாரை வாபஸ் பெற வேண்டுமென சீமான் மற்றும் அக்கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் அக்கட்சியை சேர்ந்த நபர்கள் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வீரலட்சுமி புகார் அளித்தார். […]

You May Like