fbpx

’இனி ரயில் டிக்கெட்டை இப்படி புக் பண்ணுங்க’..!! கட்டாயம் இருக்கும்..!! ஐஆர்சிடிசி-யின் புதிய வசதி..!!

நாட்டில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ஆனால், ரயிலில் டிக்கெட் கிடைப்பது மிகவும் சிரமமாக உள்ளது. அதிலும் குறிப்பாக, வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் வழக்கத்தை விட பயணிகளின் கூட்டம் அதிகளவில் காணப்படுவதால், டிக்கெட் முன்பதிவு முன்கூட்டியே முடிந்து விடுகிறது. இப்படியான சமயத்தில், ரயில் டிக்கெட் பலருக்கும் கிடைப்பதில்லை என வேதனை தெரிவிக்கின்றனர். இந்நிலையில், தற்போது இந்தியாவில் ஹோலி பண்டிகை வர உள்ளதால், மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல இப்போதே டிக்கெட் முன்பதிவு செய்ய தொடங்கி விட்டனர். தற்போது டிக்கெட் முன்பதிவு உறுதிப்படுத்துவதற்கு பயணிகள் ஐஆர்சிடிசி இணையதளத்தை அணுகலாம்.

இதன் மூலமாக உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளை பெரும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. அதாவது டிக்கெட் முன்பதிவு செய்யும்போது பயணிகள் ரயில்வே வாரியத்தின் ஐஆர்சிடிசி இணையதளத்தில் VIKALP என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். இதனால், முன்பதிவு செய்யப்பட்ட ரயில் மற்றும் அதே வழித்தடத்தில் இயங்கும் பிற ரயில்களில் விவரங்களை பார்க்க முடியும். இல்லையென்றால் நீங்கள் முன்பதிவு செய்த டிக்கெட்டை தேர்வு செய்து சப்மிட் கொடுத்து உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம்.

Chella

Next Post

தனியார் வங்கியில் வேலை…! MBA முடித்த நபர்கள்… உடனே விண்ணப்பிக்கவும்…!

Tue Feb 21 , 2023
KOTAK வங்கியில் காலி பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Asst.Acquisition Manager பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 50 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் கல்வி நிறுவனங்களில் MBA தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணியில் சேர முன் அனுபவம் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பணிக்கு […]
இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!! தனியார் வங்கிகளில் வேலைவாய்ப்பு..!! என்ன செய்ய வேண்டும்..?

You May Like