5 வயது வரையிலான குழந்தைகளுக்கு பேருந்து கட்டணம் ரத்து செய்து அரசிதழில் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 8 அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில், 20 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில், சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களில் 8,000 டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த டவுன் பஸ்களில், 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டணம் இல்லை. இதை 5 வயது வரை உயர்த்தி சட்டப்பேரவையில் போக்குவரத்துத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சட்டப்பேரவையில் அறிவித்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக, இனி 5 வயது வரை உள்ள குழந்தைகள் டிக்கெட் கட்டணமில்லாமல் அரசுப் பேருந்தில் பயணம் செய்யலாம் என்று தமிழ்நாடு அரசிதழில் செய்தி வெளியாகியுள்ளது. மேலும், மாவட்ட, விரைவு பேருந்துகளில் 3 வயது முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு இருந்த அரை டிக்கெட் அனுமதி, தற்போது 5 வயது முதல் 12 வயதாக உயர்த்தப்பட்டுள்ளது.