சாமானிய மக்களும் குறைவான செலவில் திருமணம் செய்யும் வகையில், திருமண மண்டபங்கள் கட்டும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக உத்தரப்பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு பொதுமக்கள், இளைஞர்கள் என பல்வேறு பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது சாமானிய மக்களும் மிகவும் பிரம்மாண்டமாக திருமணங்களை நடத்துவதற்காக கிராமங்கள்தோறும் திருமண மண்டபங்களை கட்டும் திட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருமண மண்டபங்கள் கட்டும் பணி முழுமை அடைந்தவுடன் குறைவான செலவிலேயே பிரம்மாண்டமாக திருமணம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்து கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் கிராமங்களில் உள்ள பொதுமக்கள் திறந்த வெளிகளில் மலம் கழிப்பதை தடுப்பதற்காக அனைத்து வீடுகளிலும் கழிப்பறைகளை கட்டித் தருவதற்காகவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் பொதுமக்களின் அனைத்து வீடுகளிலும் கழிப்பறை கட்டும் பணி துவங்கப்படும் எனவும் உத்தரப்பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.