fbpx

இனி சபரிமலைக்கு பக்தர்கள் பறந்து வரலாம்..!! நிலம் கையகப்படுத்த கேரள அரசு ஆணை..!!

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலையில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்த கேரளா அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

எரிமேலி மற்றும் மணிமலை பகுதியில் உள்ள செருவேலி எஸ்டேட்டை விமான நிலையத்துக்காக கையகப்படுத்தப்பட இருக்கிறது கேரள அரசு. இந்நிலையில் செருவேலி எஸ்டேட் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் நிலம் கையகப்படுத்தப்படுவதற்கான தொகையை நீதிமன்றத்தில் செலுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

இனி சபரிமலைக்கு பக்தர்கள் பறந்து வரலாம்..!! நிலம் கையகப்படுத்த கேரள அரசு ஆணை..!!

கடந்த 2017ஆம் ஆண்டு சபரிமலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக 2,263 ஏக்கர் நிலத்தில் விமான நிலையம் அமைப்பதற்கான அரசாணையை கேரள அரசு பிறப்பித்திருந்தது. கடந்த 2018ஆம் ஆண்டு சர்வதேச டெண்டர் கோரப்பட்டு ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், அதற்கான நிலம் கையகப்படுத்த கேரளா அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதன்மூலம், உலகெங்கிலும் இருந்து சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Chella

Next Post

முன்னாள் உலக கத்தோலிக்கர்களின் தலைவர் போப் 16-வது பெனடிக் காலமானார்!...

Sat Dec 31 , 2022
முன்னாள் உலக கத்தோலிக்கர்களின் தலைவரான போப் 16-வது பெனடிக் உடல் நலக்குறைவால் காலமானார். முன்னாள் உலக கத்தோலிக்கர்களின் தலைவரான போப் 16-வது பெனடிக் வயது முதிர்வு காரணமாக பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின்பு அவர் வாட்டிகனில் உள்ள குருமார்களின் மடத்தில் தங்கி ஓய்வு எடுத்து வந்தார். இந்த நிலையில் 95 வயதாகும் 16-வது பெனடிக்கிற்கு கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக வாடிகனில் உள்ள மருத்துவமனையில் […]

You May Like