fbpx

’இனி ஆக்‌ஷன் சீன் தான்’..!! பேருந்து படிக்கட்டில் பயணித்தால்..!! ஓட்டுநர், நடத்துனருக்கு அதிரடி உத்தரவு..!!

மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்தால் காவல் நிலையம்/ காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்க வேண்டும் என ஓட்டுனர், நடத்துனர்களுக்கு மாநகர போக்குவரத்து கழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் நாளொன்றுக்கு 3,300 பேருந்துகளை பொதுமக்களின் தேவைக்காக இயக்கி வருகிறது. பயணிகளின் சேவைக்காக முக்கியப் பங்கு வகிக்கும் மாநகர பேருந்து சேவையில் படிக்கட்டுகளில் தொங்கியபடி பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயணம் செய்வது, மேற்கூரையில் ஆபத்தான முறையில் பயணம் போன்றவற்றை அவ்வபோது செய்து வருகின்றனர்.

’இனி ஆக்‌ஷன் சீன் தான்’..!! பேருந்து படிக்கட்டில் பயணித்தால்..!! ஓட்டுநர், நடத்துனருக்கு அதிரடி உத்தரவு..!!

இதை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய மாணவர்கள் இதுபோன்று பயணித்தால் காவல் நிலையத்திற்கும், காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் உடனடியாக பேருந்தின் ஓட்டுநர், நடத்துனர் தகவல் தெரிவிக்க வேண்டும் என மாநகர போக்குவரத்து கழக இயக்குனர் அன்பு ஆபிரகாம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்திட கவனமாக இருக்க வேண்டும்” எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Chella

Next Post

”மக்களே எச்சரிக்கை”..!! வங்கக்கடலில் காத்திருக்கும் ’சிட்ரங்’ புயல்..!! பாதிப்பு எப்படி இருக்கும் தெரியுமா..?

Wed Oct 19 , 2022
மத்திய மேற்கு வங்கக்கடலில் ‘சிட்ரங்’ புயல் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகி பின்னர் புயலாக உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் […]
”மக்களே எச்சரிக்கை”..!! வங்கக்கடலில் காத்திருக்கும் ’சிட்ரங்’ புயல்..!! பாதிப்பு எப்படி இருக்கும் தெரியுமா..?

You May Like