மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் பிஎம் கிசான் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பரபரப்பான அரசியல் சூழல், மத்தியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். பொதுவாக, வருமான வரி சலுகை, ரெப்கோ வட்டி விகிதம், தொழில் வளர்ச்சி, இளைஞர் திறன் மேம்பாடு, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு போன்றவைக்காக பட்ஜெட்டில் அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில், விவசாயிகளுக்கும் முக்கிய அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் மூலம் மத்திய அரசால் ஆண்டுக்கு ரூ.6,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை வருடத்திற்கு 3 தவணைகளாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் இதுவரை சுமார் 8.5 கோடி விவசாயிகள் பலனடைந்துள்ளனர்.
இந்நிலையில், பிஎம் கிசான் திட்டத்தில் விவசாயிகளின் உதவித்தொகையை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், இடைக்கால பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.6,000 இருக்கும் உதவித்தொகையை ரூ.8,000 உயர்த்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் நாட்டின் விவசாயிகள் மேலும் பயன்பெறுவர்.