fbpx

’இனி பள்ளி மாணவர்கள் கட்டாயம் இதை செய்யக்கூடாது’..! வெளியான பரபரப்பு உத்தரவு

பள்ளிகளில் மாணவர்கள் கம்மல், செயின், காப்பு, கைகளில் கயிறு போன்றவற்றை அணிய தடை விதித்து சமூக பாதுகாப்பு நலத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக கல்வித்துறை சார்ந்த சுற்றறிக்கைகள் அவ்வப்போது வெளியாவது வழக்கம். அந்த வகையில், சமூக பாதுகாப்புத்துறை மூலமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல், வேறு சில மாவட்டங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த உத்தரவில், ”பள்ளி மாணவர்கள் பள்ளி வளாகங்களில் எந்த மாதிரியான பழக்க வழக்கங்களை கடைபிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

’இனி பள்ளி மாணவர்கள் கட்டாயம் இதை செய்யக்கூடாது’..! வெளியான பரபரப்பு உத்தரவு

அதில், குறிப்பாக பள்ளி மாணவர்கள் இனி கைகளில் எந்த விதமான கயிறும் கட்டக் கூடாது என்று சமூக பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், எண்ணெய் தேய்த்து தலைவார வேண்டும், டாட்டூ குத்தக்கூடாது, காலணி அணிந்து வர வேண்டும், கம்மல், செயின், காப்பு போன்றவற்றை மாணவர்கள் அணியக் கூடாது, பிறந்த நாளாக இருந்தாலும் சீருடையில்தான் வர வேண்டும் என மாணவர்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் சாதிய அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில், கைகளில் வண்ண கயிறு அணிவது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக மாணவர்களிடையே பிளவு உருவாகி வருகிறது. சில சமயங்களில் இது மோதலுக்கும் வழிவகுக்கிறது. எனவே, மாணவர்களின் நலன் கருதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Chella

Next Post

சூர்யாவுக்கு திருப்புமுனையாக அமைந்த படம்: விஜய், அஜித், விக்ரம்.. நிராகரித்த படம் எது என்று தெரியுமா?

Thu Jul 14 , 2022
சினிமாவில் நடிக்கும் ஹீரோக்கள், ஒரு ஒரு படம் நடித்தாலும் நல்ல கதையாக தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்று நினைத்து கதைகளை தேர்வு செய்வார்கள். அப்படி தேர்ந்தெடுக்கும் கதைகளில் வெளியாகும் படங்கள் சில அமோகமாக ஓடி வசூலை குவிக்கும். சில படங்கள் அட்டர் ப்ளாப் ஆகும். அப்படி சில இயக்குனர்கள் சில நடிகர்களிடம் கூறும் கதைகளை அவர்கள் நிராகரிக்கும் பட்சத்தில், அந்த கதையில் வேறொரு நடிகர் நடித்து வெளிவந்து, படம் பிரம்மாண்ட […]

You May Like