3 கோடி புதிய ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்குவதற்கான டெண்டர் கோரி தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு மின் வாரியத்தில் ஏற்படும் செலவினங்களை குறைக்கவும், மின் பயன்பாட்டில் கணக்கீட்டில் வெளிப்படைத்தன்மை இருக்கவும், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கொண்டுவரப்போவதாக மின்வாரியம் தெரிவித்திருந்தது. இதற்கான பணிகளும் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற மின் வாரிய இயக்குனர்கள் குழு கூட்டத்தில், ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கு, மீண்டும் டெண்டர் கோருவது உள்ளிட்ட பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதையடுத்து, தற்போது தமிழ்நாடில் ஸ்மார்ட் மீட்டருக்காக டெண்டரை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. 3 கோடி புதிய ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்குவதற்கான டெண்டர் கோரி தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 2026ஆம் ஆண்டுக்குள் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்த மத்திய அரசு கெடு விதித்துள்ளது.
இதையடுத்து, ரூ.20,000 கோடி செலவில் 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்த தமிழ்நாடு அரசு தற்போது டெண்டர் கோரியுள்ளது. இதன் மூலம் மின் கணக்கீட்டில் நடைபெறும் முறைகேடுகள் தடுக்கப்படும் என கூறப்படுகிறது. ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டால், ஊழியர்கள் வீடுகளுக்கு சென்று மின் கணக்கீடு எடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. கட்டண விவரம் நுகர்வோரின் செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பி வைக்கப்படும்.
Read More : கேரட்டின் ரகசியம்..!! ஆண்மையை அதிகரிக்கும் அருமருந்து..!! பச்சையாக சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா..?