fbpx

’இனிமே தான் ஆட்டமே இருக்கு’..!! தீவிரமடைகிறது வடகிழக்கு பருவமழை..!! வானிலை மையம் எச்சரிக்கை

வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், அதன் மூலம் பருவமழை தீவிரமடையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை வெளுத்து வாங்கிய மழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் மழை வெள்ள பாதிப்புக்கு உள்ளாகின. குறிப்பாக மயிலாடுதுறை, சீர்காழியில் 44 செ.மீ அளவிற்கு மழை பெய்ததால், நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. இதையடுத்து, வங்கக்கடலில் கடந்த 9ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஓரிரு நாட்களில் வலுவிழந்தது. இதனால், சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் மழையின் பாதிப்பு குறைந்தது. அதேநேரத்தில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

’இனிமே தான் ஆட்டமே இருக்கு’..!! தீவிரமடைகிறது வடகிழக்கு பருவமழை..!! வானிலை மையம் எச்சரிக்கை

இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என்றும், தமிழ்நாட்டில் வருகிற 20ஆம் தேதிக்கு பிறகு பல்வேறு பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வருகிற 19ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Chella

Next Post

#பஞ்சாப் : இரயில் நிலையத்தில் இருந்த சூட்கேஸ்.. திறந்து பார்க்கையில் அதிர்ச்சி.!

Wed Nov 16 , 2022
பஞ்சாப் மாநில பகுதியில் ஒரு இரயில்வே நிலையத்தில் சூட்-கேஸ் பெட்டி ஒன்று ஓரமாக இருந்துள்ளது. முதலில் அதனை யாரும் கண்டுகொள்ளவில்லை. பிறகு வெகு நேரமாகியும் அந்த பெட்டி அங்கேயே இருந்ததால் மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.  இதனை தொடர்ந்து அங்கே வந்த காவல்துறையினர் சூட்கேஸை திறந்து பார்த்த போது மிகவும் அதிர்ச்சியடைந்தனர். சூட்கேஸில் 30 வயது மதிக்கதக்க ஆண் சடலம் ஒன்று இருந்துள்ளது . அதன் பிறகு சடலத்தை மீட்டு […]
கள்ளக்காதலுக்கு இடையூறு..!! கணவர் கொலை..!! உடலை புதைத்த இடத்தில் செப்டிக் டேங்க்..!! பகீர் சம்பவம்..!!

You May Like