fbpx

”இனி ரவுடிகளுக்கு புரியும் மொழி நடவடிக்கை இருக்கும்”..!! புதிதாக பொறுப்பேற்ற சென்னை ஆணையர் அருண் பேட்டி..!!

”இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை இருக்கும்” என புதிதாக பொறுப்பேற்றுள்ள சென்னை மாநகர ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் திமுக அரசு மீது கடும் விமர்சனங்களை உண்டாக்கியது. பல அரசியல் கட்சியினர் தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கை கடுமையாக விமர்சித்தனர். இந்நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பணியிடம் மாற்றப்பட்டு, சென்னையின் புதிய காவல் ஆணையராக அருண் ஐ.பி.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை ஆணையராக பதவியேற்ற பின், முதல் முறையாக செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், “சென்னையில் ரவுடிகளை கட்டுப்படுத்துவதே முதன்மையான பணியாகும். நடந்த குற்றங்களுக்கு யார் காரணம் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். இனி குற்றங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சென்னையில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ரவுடிகளுக்கு புரியும் மொழியில் இனி நடவடிக்கை இருக்கும். என்னிடம் பொறுப்பை ஒப்படைத்த முதலமைச்சரின் நம்பிக்கையை நிறைவேற்றுவேன்” என தெரிவித்தார்.

Read More : ”ஐய்யோ… என் புள்ளைய வெட்டி சாய்ச்சுட்டாங்களே”..!! தாய் கண்முன்னே கொலைக்கு பழி தீர்த்த கும்பல்..!! திண்டுக்கல்லில் அதிர்ச்சி..!!

English Summary

Arun, the newly appointed Chennai Municipal Commissioner, said, “From now on, operations will be in a language that the raiders can understand.”

Chella

Next Post

தாலி கழுத்துக்கு மட்டும் தான்.. மனசுக்கு கிடையாது..!! புடிக்கலன்னா உடனே பிரிந்து விடுவது தான் நல்லது!! - நடிகர் பார்திபன் ஓபன் டாக்

Mon Jul 8 , 2024
Actor Parthiban recently talked about his married life in an interview. In it, Parthiban has also shared some things about love, where he says that everything is for the neck and not for the mind.

You May Like