fbpx

”இனி இவர்களும் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்”..!! போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் மாஸ் அறிவிப்பு..!!

பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்துப் பயணத் திட்டத்தை மலைப் பகுதிகளுக்கு விரிவுபடுத்துவது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு அத்தியாவசிய போக்குவரத்து சேவைகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் மூலம் குறைந்த கட்டணத்தில் அரசு வழங்கி வருகிறது. அனைத்து கிராம பகுதிகளுக்கும் பேருந்து வசதியை ஏற்படுத்தி, தடையற்ற போக்குவரத்து சேவையையும் அளித்து வருகிறது. அத்துடன், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவியர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு இலவச பேருந்து பயணச்சலுகை, “மகளிர் கட்டணமில்லா பயணம் திட்டம், பொதுமக்களின் தேவைக்கேற்ப புதிய பேருந்து வழித்தடங்களை தொடங்கி வைத்தல், பழைய பேருந்துகளை புதுப்பித்தல் போன்ற பல்வேறு திட்டங்களையும் தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில், அரசுப் போக்குவரத்து கழகங்களின் செயல்பாடுகள் குறித்து தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, அலுவலர்களுக்கு சில முக்கிய அறிவுறுத்தல்களை அமைச்சர் வழங்கினார். புதிய பஸ்கள் அறிமுகப்படுத்துவதையும், பழைய பஸ்களை புதுப்பித்து இயக்கும் பணிகளையும் விரைவுபடுத்த வேண்டும் என்றார்.

மேலும் பொதுமக்கள் நலன் கருதி, அனைத்து பேருந்துகளையும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போக்குவரத்துக் கழகங்களில் பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனையகங்கள், சூரிய மின் தகடுகள் நிறுவுதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் கூறினார். அலுவலகங்களில் சிசிடிவி, கைரேகை தொழில்நுட்ப வருகைப் பதிவேடு ஏற்படுத்துதல் போன்றவற்றை துரிதப்படுத்த வேண்டும் என்றும் விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தினார்.

பேருந்துகளை இயக்க ஏதுவாக, பணிக்கு வராத பணியாளர்களை அழைத்துப் பேச வேண்டும். உதவி எண்களில் பெறப்படும் புகார்களுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும். மழைக் காலத்தில் இடர்பாடின்றிப் பேருந்துகளில் பொதுமக்கள் பயணிப்பதை உறுதி செய்ய வேண்டும். பெண்களுக்கான கட்டணமில்லா பஸ் பயணத்திட்டமான, விடியல் பயணத் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மலைப்பகுதியில் உள்ள பெண்கள் அனைவரும் பயனடையுமாறு விரிவுபடுத்த ஆய்வு மேற்கொள்ள வேண்டும்” என்று அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தினார்.

Chella

Next Post

தூங்கிக் கொண்டிருந்த 85 வயது மூதாட்டியை துடிதுடிக்க பலாத்காரம் செய்த இளைஞர்..!! பிறப்புறுப்பில் கொடூர காயங்கள்..!! அதிர்ச்சி

Sat Sep 2 , 2023
டெல்லி மாநிலம் நேதாஜி சுபாஷ் பிளேஸ் பகுதியில், 85 வயது மூதாட்டி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால் புகாரளித்த நிலையில், ஆகாஷ் என்ற நபரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். வெள்ளிக்கிழமை அதிகாலை சுமார் 4 மணியளவில் அந்த மூதாட்டி தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஆகாஷ் என்ற 28 வயது […]

You May Like