உத்தரபிரதேச மாநிலம் சந்த்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் சிங் செங்கல் சூளையில் காவலாளியாகப் பணிபுரிந்து வருகிறது.. இவருக்கு மாத வருமானம் ரூ.5000க்கும் குறைவு எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் ரூ.2.25 கோடி வருமான வரி நிலுவையில் இருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ராஜ்குமார் சிங்க்கு மனைவி, மூன்று மகள்கள் மற்றும் இரண்டு மகன்களும் உள்ளனர். குடும்பத்தில் அனைவருமே கூலி வேலை செய்து வருகின்றனர். இப்படியான சூழலில் ரூ.2.25 கோடி வருமான வரி தொகை கட்ட வேண்டும் என வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
ராஜ்குமார் சிங் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கபானா கிராமின் வங்கியில் மீன் வளர்ப்பிற்காக கடன் வாங்கினார். மழைக்காலம் தொடங்கியதும், குளத்தில் இருந்த மீன்கள் அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டு நஷ்டம் அடைந்ததாக தெரிவித்தார். இருப்பினும் வங்கியில் வாங்கிய கடனை அடைத்தான். இதைத் தவிர அவர் தனது வாழ்க்கையில் வேறு எந்தக் கடனும் வாங்கியதில்லை எனக் கூறப்படுகிறது. வங்கியில் கடன் வாங்கிய போது ராஜ்குமார் சிங் சமர்ப்பித்த ஆவணங்களை யாரோ ஒருவர் தவறாகப் பயன்படுத்தியுள்ளதாக வருமான வரித் துறையும் நிதி நிபுணர்களும் கூறுகின்றனர்.
விசாரணையில் அப்பகுதி மக்களின் ஆதார் மற்றும் பான் கார்டுகளைப் பயன்படுத்தி போலி நிறுவனங்களை உருவாக்கி, இதுவரை ரூ.80 கோடிக்கும் அதிகமான வணிகம் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. போலி நிறுவனங்களின் பரிவர்த்தனைகள் விசாரணையில் இன்னும் அதிகரிக்கக்கூடும் என்பதால், வெளிச்சத்திற்கு வந்துள்ள தொகை அதிகரிக்கக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். உங்கள் பான் கார்டை வேறு யாராவது தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்று நீங்கள் சந்தேகித்தால், அதை விசாரித்து தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
Read more: நிர்மலா சீதாராமனுடன் சீமான் சந்திப்பு…! பரபரப்பாகும் அரசியல் களம்..!