fbpx

’இனி அவர்கள் அனுமதி கொடுத்தால் மட்டுமே பணம் அனுப்ப முடியும்..!! டிசம்பர் 31 முதல் அமல்’..!!

இந்திய அரசும் UPI பேமெண்ட்டுகளை பயன்படுத்த மக்களை ஊக்குவித்து வரும் இந்த சூழ்நிலையில், அண்மையில் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் இந்த UPI-க்களை 5 லட்சம் ரூபாய் வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்கின்ற வரம்பை அதிகரித்து உத்தரவிட்டிருந்தது ரிசர்வ் வங்கி. இந்த மாற்றத்தினால் பல்வேறு நன்மைகளை பெற்றுள்ளதாக பல கல்வி நிறுவனங்களும், மருத்துவமனைகளும் தெரிவித்துள்ளன.

முன்னதாக ஒரு யுபிஐ பேமென்ட்டின் வரம்பு என்பது ஒரு லட்சம் ரூபாயாக இருந்தது. இந்த சூழலில் வருகின்ற டிசம்பர் 31ஆம் தேதியோடு யுபிஐ பேமென்ட்களில் ஒரு புதிய மாற்றம் ஏற்பட உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது. கூகுள் பே, ஃபோன் பே போன்ற பல யுபிஐ பேமென்ட் செயலிகளை பயன்படுத்தும் அனைவருக்கும் இது பொருந்தும். டிஜிட்டல் முறையில் பண பரவுவதனை நடக்கும் அதே நேரம் இதில் அதிக அளவிலான மோசடிகளும் நடந்து வருகிறது.

ஆகவே, இதனை முழுமையாக தடுக்கும் முயற்சியில் மத்திய அரசு ஒரு கடுமையான நடவடிக்கை எடுக்க உள்ளது. அதன்படி, இனி 5,000 ரூபாய்க்கு மேல் உள்ள தொகையை நீங்கள் தனி நபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ மாற்றும் பொழுது குறிப்பிட்ட அந்த எண்ணிற்கு எஸ்எம்எஸ் மூலமாகவோ அல்லது அழைப்பின் மூலமாகவோ ஒரு அறிவிப்பு வழங்கப்படும். அந்த அறிவிப்பை ஏற்று உரிய அந்த நபர் அங்கீகரித்தால் மட்டுமே அந்த பேமென்ட் இனி செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல ஆண்டுகளாக செல்லுபடியாகாமல் இருக்கும் UPI payment கணக்குகளை சரிபார்க்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Chella

Next Post

ஹெல்மெட் அணியாமல் சென்ற இளைஞர்..!! துரத்திச் சென்று எட்டி உடைத்த காவலர்..!! மதுரையில் அதிர்ச்சி..!!

Sat Dec 16 , 2023
மதுரை மாவட்டம் பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் வாகன சோதனையில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் ஹெல்மெட் அணியாமல் வந்த நபரை ஒரு காவலர் விரட்டிசென்று பிடிக்க முயன்றுள்ளார். இதனால், வாகனத்தில் சென்ற நபர் தடுமாறி கீழே விழுந்து ரத்த காயங்களுடன் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆன்லைன் மூலம் அபராத விதிப்பு செய்யப்பட்டு வரும் நிலையில், தலைக்கவசம் அணியாமல் இருந்ததற்காக பைக்கில் சென்றவரை விரட்டி, […]

You May Like