fbpx

இனி X தளத்தில் வீடியோ கால் பண்ணலாம்!… ஆண்ட்ராய்டு போன்களிலும் வந்துவிட்டது புதிய வசதி!

ஆண்ட்ராய்டு போன் பயனர்கள் X தளத்தில் வீடியோ மற்றும் ஆடியோ கால் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ட்விட்டர் என்றழைக்கப்பட்ட X நிறுவனம் எலான் மஸ்க்கின் கைகளில் மாறியதில் இருந்து பல்வேறு மாற்றங்களுக்கு ஆளாகி வருகிறது. ப்ளூ டிக் வாங்குவதற்கு கட்டணம், ஆட்குறைப்பு, X பெயர் மற்றும் லோகோ மாற்றம், பதிவுகளை போடுவதற்கும், பதிவுகளுக்கு பதில் அளிப்பதற்கும் கட்டணம் (பரிசோதனையில் உள்ளது) என பல மாற்றங்களை கண்டுள்ளது.

மேலும், X தளத்தை ஒரு அனைத்து சேவைக்களுக்குமான தளமாக மாற்றுவதை எலான் மஸ்க் நோக்கமாக கொண்டிருக்கிறார். எனவே, X தளத்திலேயே பண பரிமாற்றம், வீடியோ மற்றும் ஆடியோ அழைப்புகள் மேற்கொள்வது போன்ற வசதிகள் கொண்டு வரப்படும் என கூறப்பட்டது. அந்த வகையில், X தளம் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான சேவையை அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. ஆடியோ மற்றும் வீடியோ அழைப்பு iOS-இல் மட்டும் கிடைக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஆண்ட்ராய்டு போன்களுக்கும் இந்த புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆடியோ மற்றும் வீடியோ அழைப்பை பிரீமியம் பயனர்கள் மட்டுமே மற்றவர்களுக்கு அழைக்க முடியும். மற்ற பயனர்கள் அழைப்பை பெற முடியுமே தவிர ஏற்படுத்த முடியாது. எக்ஸ் தளத்தை அப்டேட் செய்வதன் மூலம் இந்த சேவையை பெற முடியும். இதன் மூலம் பிரீமியம் வாங்குபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.

X தளத்தில் ஆடியோ அல்லது வீடியோ அழைப்பை எப்படி செய்வது? Envelope (மெசேஜ்) ஐகானை கிளிக் செய்யவும். உங்கள் மெசேஜ் பக்கம் திறக்கும். ஏற்கனவே உள்ள மெசேஜ் உரையாடலில் கிளிக் செய்யவும் அல்லது புதிய உரையாடலைத் தொடங்கவும். தொலைபேசி ஐகானை கிளிக் செய்யவும். அப்போது உங்களுக்கு ஆடியோ மற்றும் வீடியோ ஆப்ஷன் தெரியும். ஆடியோ அழைப்பைத் தொடங்க Audio Call ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

வீடியோ அழைப்பைத் தொடங்க Video Call ஆப்ஷனை கிளிக் செய்யவும். நீங்கள் அழைக்கும் கணக்கு நீங்கள் அவர்களை அழைக்கிறீர்கள் என்ற அறிவிப்பைப் பெறும், மேலும் அவர்கள் எடுக்கவில்லை என்றால் அவர்கள் மிஸ்டுகால் அறிவிப்பைப் பெறுவார்கள்.

Kokila

Next Post

வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் மறந்தும் கூட இந்த விஷயங்களை வீட்டில் செய்யாதீர்கள்.!?

Sat Jan 20 , 2024
பொதுவாக வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகள் கடவுளுக்கு உகந்த நாளாக கூறப்பட்டு வருகிறது. பல கோயில்களிலும் வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகள் சிறப்பு வாய்ந்த நாட்களாக கருதப்பட்டு கடவுளுக்கு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் செய்து வருகின்றனர். அப்படியிருக்க இந்த கிழமைகளில் வீட்டின் பெண்கள் ஒரு சில விஷயங்களை செய்யக்கூடாது. அவை என்னென்ன என்பதை குறித்து பார்க்கலாம்? 1. வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமையில் வீட்டில் விளக்கு ஏற்றும் போது நல்ல நேரம் முடிவதற்குள் அனைத்து […]
முன்னோர்களின் புகைப்படங்களை வீட்டில் வைப்பதில் இவ்வளவு விஷயம் இருக்கா..? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

You May Like