fbpx

’இனி இணையதளம் மூலம் பஸ் பாஸ் பெறலாம்’..!! ’வந்தாச்சு சூப்பர் வசதி’..!! தமிழ்நாடு அரசு அதிரடி..!!

பயணக் கட்டணச் சலுகை அனுமதிச் சீட்டுகளை இணையதளம் மூலமாக விண்ணப்பித்து பெற்றுகொள்ள போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் தினசரி அலுவலகம் சென்று வருவோரின் வசதிக்காக பயணக் கட்டணச் சலுகை அனுமதிச் சீட்டுகள் வழங்கப்படுகிறது. இது தினசரி அரசுப் பேருந்துகளை பயன்படுத்துவோருக்கு உதவிகரமாக இருந்து வருகிறது.

தற்போது பெண்களுக்கான இலவச பயணத் திட்டம் அமலில் இருக்கிறது. இதனால், நகரப் பேருந்துகளில் பெண்கள் தினசரி இலவசமாக பயணித்து வருகின்றனர். அதேசமயம் மற்ற பேருந்துகளில் கட்டணம் செலுத்தி பயணிக்க வேண்டும். இதேபோல் வேலைக்கு செல்லும் ஆண்களும் கட்டணம் செலுத்தி தான் பயணிக்க வேண்டும்.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் வழங்கப்பட்டு வரும் பயணக் கட்டணச் சலுகை அனுமதிச் சீட்டுகளை இணையதளம் மூலமாக விண்ணப்பித்து, பயனாளிகள் பெற வழிவகை செய்யப்படும் என்று சட்டமன்றத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்திருந்தார்.

அதன்படி இ-சேவை மையங்கள் மூலம் பஸ் பாஸ் பெரும் வசதி தொடங்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் இந்த ஆன்லைன் வசதியை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் உரிய அலுவலகம் சென்று பஸ் பாஸ் எடுக்க தேவையில்லை.

வீட்டின் அருகில் உள்ள இ-சேவை மையத்தில் அல்லது tn.e.sevai என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பித்தால் போதும். அதற்குரிய ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். உரிய எஸ்.எம்.எஸ். பெறப்பட்ட பின்பு பஸ் பாஸை பிளாஸ்டிக் அட்டையில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Chella

Next Post

வேண்டுமென்றே ஜி20 மாநாட்டை தவிர்க்கும் தலைவர்கள்..? ரஷ்யா, சீனாவை தொடர்ந்து ஸ்பெயினும் அறிவிப்பு..!!

Fri Sep 8 , 2023
டெல்லி ஜி20 உச்சி மாநாட்டில் பெட்ரோ சான்செஸ் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜி 20 அமைப்புக்கு இம்முறை இந்தியா தலைமை தாங்கி உள்ளது. இந்நிலையில் நாளையும் (சனிக்கிழமை), நாளை மறுநாளும் (ஞாயிறு) டெல்லியில் உள்ள பிரகதி மைதானம் பாரத் மண்டபத்தில் ஜி 20 உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் இந்தியாவுக்கு வருகை தர உள்ளனர். அந்த வகையில், ஸ்பெயின் நாட்டின் அதிபர் […]

You May Like