fbpx

இனி வீட்டில் இருந்தே அரசின் இந்த சேவைகளை பெறமுடியும்!… இணையதளம் அறிமுகம்!… மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!…

வீட்டில் இருந்தபடியே அரசு வழங்கும் 13,000 இணையதள சேவைகளை பெறும் தேசிய அரசாங்க சேவைகள் போர்டல் வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய, மாநில, மாவட்டம் மற்றும் உள்ளூர் வட்டங்களில் உள்ள அரசு நிறுவனங்களால் வெவ்வேறு இணையதளங்கள் மூலம் குடிமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் இப்போது ஒரே தளத்தின் கீழ் வரும் வசதியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் பல்வேறு சேவைகளை நன்கு வகைப்படுத்தப்பட்ட மற்றும் எளிதாக பட்டியலிட்டு தேடும் வகையில் புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அரசு அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய இணையதளமான https://services.india.gov.in இல் 15 முக்கிய பொது சேவை துறைகளுக்கு 9,960 க்கும் மேற்பட்ட சேவைகளை இதன்மூலம் நாம் பெறமுடியும். இந்த போர்ட்டலில் ஒவ்வொரு குடிமகனும் 13,350 சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ஆதார் கார்டு பான் கார்டை இணைக்க, அரசு ஏலத்தில் பங்கேற்க, உங்கள் வரியை தெரிந்து கொள்ள, பிறப்பு சான்றிதழ் பெற, இந்த வலைத்தளத்தின் மூலம், உங்கள் அனைத்து வேலைகளும் விரைவாக நடக்கும், இதற்காக நீங்கள் எந்த அரசு அலுவலகத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கு ஏதாவது தேவை இருந்தால் முதலில் http://services.india.gov.in என்ற லிங்கை கிளிக் செய்யவும். அதன் பிறகு, வலது பக்கத்தில் உள்ள ‘அனைத்து வகை’ விருப்பத்தை கிளிக் செய்யவும். இதன்பிறகு உங்களுக்கு என்ன சேவை வேண்டுமோ அதை கிளிக் செய்து நீங்கள் விண்ணப்பித்து கொள்ளலாம்.

Kokila

Next Post

குஜராத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 40000க்கும் மேற்பட்ட பெண்கள் காணவில்லை!... அதிர்ச்சி ரிப்போர்ட்!...

Mon May 8 , 2023
குஜராத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போயுள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளி விவர அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு தொடங்கி 2020 வரையிலான காலகட்டத்தில் 40,000 க்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போயுள்ளனர் என்று அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) தரவுகளின்படி, 2016-ல் 7,105 பெண்களும், […]

You May Like