புகைப்படங்களுக்கு இருக்கும் View Once அம்சத்தை போல, ஆடியோவையும் ஒருமுறை மட்டுமே கேட்கும் புதிய அம்சத்தை விரைவில் கொண்டுவர இருப்பதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறுந்தகவலை பகிர்ந்து கொள்வதற்கான முதன்மை செயலியாக உள்ள வாட்ஸ் அப் செயலியை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். தங்கள் பயனர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையிலும் அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் நோக்கிலும் புதிய புதிய அப்டேட்களை வாட்ஸ் அப் நிறுவனம் வழங்கிவருகிறது. அந்த வகையில் தான்,வாடிக்கையாளர்களை கவரும் விதமாக தற்போது, புதிய அம்சத்துடன் கூடிய அப்டேட் ஒன்றை வழங்க மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
பொதுவாக வாட்ஸ் அப்பில் ஒருமுறை பார்க்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த வசதி தற்போது புகைப்படங்கள், டெக்ஸ்ட் மெஜேச்களுக்கு மட்டுமே உள்ளது. இந்த ஒருமுறை மட்டும் பார்க்கும் வகையில் அனுப்பப்படும செய்தியானது பலருக்கு மிகவும் பயனுள்ளதா இருந்து வருகிறது. இந்த வசதி மூலம் நாம் அனுப்பும் டெக்ஸ்ட் வடிவிலான செய்திகள் அல்லது புகைப்படங்கள் மற்றும் வீயோக்கள் ஆகியவற்றை ஒருமுறை ஓபன் செய்த பிறகு(View Once) ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் அவை தானாகவே மறைந்து போக்கும் வகையில் செய்து கொள்ள முடியும். இந்தநிலையில், தற்போது வாட்ஸ்அப் ஆடியோவை ஒருமுறை மட்டுமே கேட்கமுடியும் வகையில் புதிய அம்சத்துடன் கூடிய அப்டேட் ஒன்றை வழங்க மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதாவது புகைப்படங்களுக்கு இருக்கும் View Once அம்சத்தை போல, ஆடியோவையும் ஒருமுறை மட்டுமே கேட்கும் புதிய அம்சத்தை விரைவில் கொண்டுவர இருப்பதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் வெளியான அப்டேட்டின்படி, ஒரு குழுவில் யார் சேர முடியும் என்பதை தீர்மானிக்கும் திறன் அட்மின்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், உங்கள் தொடர்பில் இருக்கும் ஒருவரும், நீங்களும் எந்தெந்த வாட்ஸ்அப் குரூப்களில் ஒன்றாக இருக்கிறீர்கள். அது உங்களுக்கு தெரிந்தாலும் அல்லது நினைவில் இல்லையெனினும், நீங்கள் இருவரும் இருக்கும் பொதுவான குழுக்களைப் பார்க்க விரும்பினாலும் அதை எளிதாக செய்யலாம். அதன்படி, சர்ச் பாக்ஸில் சென்று குறிப்பிட்ட காண்டாக்டின் பெயரை தேடினாலே, நீங்கள் இருவரும் இடம்பெற்றுள்ள குழுக்களின் விவரங்களை அறியலாம். இந்த சேவை சமீபத்தில் உலகம் முழுவதும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.