fbpx

இனி கோடைகாலத்திலும் வாழைப்பழங்களை கெடாமல் பாதுகாக்கலாம்!… எப்படி தெரியுமா?… எளிய டிப்ஸ் இதோ!

அனைவரும் வாங்கக் கூடிய விலையில் கிடைக்கும் ஒரே பழம் வாழைப்பழம். நாவின் சுவை நரம்புகளையும் இவை திருப்திப்படுத்தும். நன்கு கனிந்த வாழைப்பழங்கள் தித்திப்பான சுவையில் இருக்கும். இதை சாப்பிடுவதால் உடலில் புத்துணர்ச்சி கிடைக்கும். வாழைப்பழத்தில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆகிய சத்துக்களும் நிறைந்துள்ளது. பல நோய்களை எதிர்த்துப் போராடும் சக்தியை உடலுக்குத் தருகிறது. மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் தினமும் வாழைப்பழம் உண்பதால் அந்த பிரச்சனை அப்படியே குணமாகும். செரிமான அமைப்பு, சிறுநீரகம், இதயம் தொடர்பான நோய்களிலிருந்து விடுபட வாழைப்பழம் உதவும்.

எத்தனையோ உடல்நல நன்மைகளை வாழைப்பழம் வாரி கொடுத்தாலும் கோடைகாலத்தில் வாழைப்பழத்தை நீண்ட காலம் கெடாமல் பாதுகாப்பது கடினம். சீக்கிரமே கனிந்துவிடும். சில வாழைப்பழங்கள் விரைவில் அழுகியேவிடுகிறது. வாழைப்பழம் கருப்பு நிறத்தில் மாறாமல் இருக்க அதனுடைய தண்டில் நூல் கட்டி தொங்கவிட வேண்டும். இப்படி வாழை சீப்புகளை தொங்கவிட்டால் விரைவில் கெட்டுப்போகாது. இது தவிர வாழைப்பழம் கருப்பாக மாறாமல் இருக்க பிளாஸ்டிக் பையில் சுற்றி வைத்துக்கொள்ளலாம். வாழைத்தண்டையும் டேப் வைத்து ஒட்டிவிடலாம். வாழைப்பழத்தை ப்ரெஷ்ஷாக வைத்திருக்க, ஒரு பாத்திரத்தில் வினிகரைப் போட்டு, அதில் வாழைப்பழத்தைப் போட்டு, தனித்தனியாக தொங்கவிட்டால், விரைவில் கெடாது. இந்த டிப்ஸ்களை பயன்படுத்தி வீட்டில் வாழைப்பழங்களை கெடாமல் பத்திரப்படுத்தலாம்.

Kokila

Next Post

பயங்கரம்...! இந்த 9 மாவட்டத்தில் உள்ள மக்களே...! அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை எச்சரிக்கை...!

Tue Jun 20 , 2023
தென்மேற்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ மேலடுக்குசுழற்சி நிலவுகிறது. இதன்‌ காரணமாக, இன்று வடதமிழகத்தில்‌ ஒரு சில இடங்களிலும்‌, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, தென்தமிழகத்தில்‌ ஓரிரு இடங்களிலும்‌ இடி மின்னலுடன்‌ கூடியலேசானது முதல்‌ மிதமான மழைபெய்யக்கூடும்‌. செங்கல்பட்டு,காஞ்சிபுரம்‌, ராணிப்பேட்டை, வேலூர்‌, திருப்பத்தூர்‌, திருவண்ணாமலை, கடலூர்‌, கள்ளக்குறிச்சி, விழுப்புரம்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரியில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நாளை முதல் வரும் ஜுன் […]

You May Like