Voice மூலம் எளிமையாக பயனாளர்களுக்கு தேவையான பணத்தை அனுப்பும் புதிய அம்சத்தை யுபிஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
போன் பே, கூகுள் பே போன்ற பணப் பரிமாற்ற தளத்தை காட்டிலும் யுபிஐ தளத்தில் எந்த ஒரு இடையூறுமே இல்லாமல் எளிமையாக பண பரிமாற்றம் செய்து கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் யுபியை பின் பயன்படுத்தாமலேயே வேகமாக பரிமாற்றம் செய்யும்படியான யுபிஐ லைட் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்த அம்சத்தின் மூலமாக ஒரு நாளைக்கு இரண்டு முறை 2000 ரூபாய் என்ற விகிதத்தில் யுபிஐ லைட் வாலட்டில் பணத்தை ஏற்றி தேவைக்கேற்ப 200 ரூபாய் வரை பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.
இந்த நிலையில் பயனர்களின் அனுபவத்தை சிறப்பாக்கும் விதமாக யூபிஐயில் புதிய அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. அதாவது தற்போது வரையிலும் வாடிக்கையாளர்கள் தேவையான தொகையை டைப் செய்து பணப்பரிமாற்றம் செய்து வந்த நிலையில் தற்போது வாய்ஸ் மூலமாகவே எளிமையாக பயனாளர்களுக்கு தேவையான பணத்தை அனுப்பும் புது அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.