fbpx

இனி நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பாக பயணிக்கலாம்..!! வந்தாச்சு புதிய செயலி..!! எப்படி டவுன்லோடு செய்வது..?

தேசிய நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பான மற்றும் சுமூகமான பயணத்தை உறுதி செய்வதற்காக அரசாங்கத்தின் ஒன்-ஸ்டாப் மொபைல் ஆப் ராஜ்மார்க்யாத்ரா என்ற புதிய செயலியை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) அறிமுகப்படுத்தியுள்ளது.

இது நெடுஞ்சாலை பயனர்களுக்கு தடையற்ற, நட்பு அனுபவத்தை உருவாக்கவும், பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சியான பயணத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம், நெடுஞ்சாலை பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. இந்த ராஜ்மார்க்யாத்ரா செயலி கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஐஓஎஸ் ஆப் ஸ்டோர் இரண்டிலும் கிடைக்கிறது.

இது பொதுமக்கள் மற்றும் பாதசாரிகளை மையமாகக் கொண்ட ஒரு ஒருங்கிணைந்த கைபேசி செயலியாகும். இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் குறித்த விரிவான தகவல்களை வழங்குவதோடு, பொதுமக்களின் புகார்களுக்கு தீர்வு காணவும் வழிவகுக்கிறது. இந்த செயலி தற்போது ஆங்கிலம் மற்றும் இந்தியில் கிடைக்கிறது. இந்த செயலி நெடுஞ்சாலை வாகன ஓட்டிகளுக்கு அத்தியாவசியத் தகவல்களின் ஒரே இடத்தில் இருக்கும் களஞ்சியமாக செயல்படுகிறது.

அதாவது வானிலை, சரியான நேரத்தில் ஒளிபரப்பு அறிவிப்புகள் மற்றும் அருகிலுள்ள சுங்கச்சாவடிகள், பெட்ரோல் நிலையங்கள், மருத்துவமனைகள், ஹோட்டல்கள் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகள் பற்றி இந்த செயலியில் தெரிந்து கொள்ளலாம். இந்த செயலியில் பயனர்கள் எளிதாக புகாரளிக்கலாம். மேலும், இந்த செயலி மூலம் வங்கி போர்ட்டல்களுடன் ஒருங்கிணைத்து, பயனர்கள் தங்கள் FASTagகளை ரீசார்ஜ் செய்யவும், மாதாந்திர பாஸ்களைப் பெறவும் மற்றும் FASTag தொடர்பான பிற வங்கிச் சேவைகளை அணுகும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

வாழை மட்டையை வைத்து சரமாரியாக அடித்த மாரி செல்வராஜ்..!! ’மாமன்னன்’ படப்பிடிப்பில் பயங்கரம்..!! கொந்தளித்த பிரபல நடிகர்..!!

Fri Aug 4 , 2023
இயக்குனர் மாரி செல்வராஜ் படப்பிடிப்பு சமயங்களில் படங்களில் நடிக்கும் கலைஞர்களை அடிப்பதாக செய்தி வெளியானது. அதன் பிறகு மறைந்த நடிகர் தங்கராஜ் பரியேறும் பெருமாள் படத்தில் நடித்து கொண்டிருந்த போது தன்னை படப்பிடிப்பில் வைத்து மாரிசெல்வராஜ் அடித்ததாக தெரிவித்து இருந்தார். அவர் பேசிய வீடியோவும் கடந்த சில நாட்களுக்கு முன் வைரலானது. இந்நிலையில், அதனைத் தொடர்ந்து தற்போது சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்த டெலிபோன் ராஜ் சமீபத்திய பேட்டி […]

You May Like