fbpx

8 அத்தியாவசிய மருந்துகளின் விலை 50% உயர்வு..!! பொதுமக்கள் அதிர்ச்சி.. விலை உயர்வுக்கு என்ன காரணம்?

தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் சமீபத்தில் ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது. அதாவது அத்தியாவசிய மருந்துகளின் விலையை 50% உயர்த்தியுள்ளது. இந்த மருந்துகள் ஆஸ்துமா, கிளௌகோமா, காசநோய் மற்றும் மனநோய் போன்ற பல நோய்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த முடிவு ஏன் எடுக்கப்பட்டது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள்: இந்த மருந்துகளின் விற்பனை விலை மிகவும் குறைவாக இருந்ததால், அவற்றை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதன் விளைவாக சில நிறுவனங்கள் இந்த மருந்துகளை விற்பனை செய்வதை நிறுத்தியது. இந்த மருந்துகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் விலையை உயர்த்தக் கோரி NPPA க்கு கோரிக்கை வைத்தது.

விலையை உயர்த்தவில்லை என்றால், இந்த மருந்து தயாரிப்பை நிறுவங்கள் நிறுத்த வாய்ப்பு உள்ளது. இதனால் இந்த மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, நோய்வாய்ப்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருந்துகளைப் பெற முடியாத நிலை ஏற்படும். இந்த அத்தியாவசிய மருந்துகளை அதிக அளவு மக்கள் பயன்படுத்துகின்றனர். மருத்து தட்டுப்பாடு ஏற்பட்டால் மக்கள் சிரமத்திற்கு ஆளாவார்கள். எனவே, அரசாங்கம் விலையை 50 சதவீதம் உயர்த்தியுள்ளது,

எந்தெந்த மருந்துகள் விலை உயர்ந்தன?

  • ஆஸ்துமாவுக்கான மருந்துகள்
  • கண் நோய்களுக்கான மருந்துகள்
  • காசநோய்க்கான மருந்துகள்
  • மன நோய்களுக்கான மருந்துகள்

விலை உயர்ந்த மருந்துகளின் பட்டியல் இதோ..

  • பென்சில்பெனிசிலின் (1 மில்லியன் IU ஊசி)
  • அட்ரோபின் ஊசி (0.6 mg/ml)
  • ஊசிக்கு ஸ்ட்ரெப்டோமைசின் தூள் (750 மி.கி மற்றும் 1000 மி.கி)
  • சல்பூட்டமால் மாத்திரை (2 மி.கி மற்றும் 4 மி.கி மற்றும் சுவாசக் கரைசல் 5 மி.கி/மிலி)
  • பைலோகார்பைன் (2% சொட்டுகள்)
  • செஃபாட்ராக்சில் மாத்திரை (500 மிகி)
  • ஊசிக்கான டெஸ்ஃபெரியோக்சமைன் (500 மிகி)
  • லித்தியம் மாத்திரைகள் (300 மி.கி.)

Read more ; கனமழை காரணமாக 10 விமானங்கள் ரத்து… 14 விமானங்கள் தாமதம்…!

English Summary

NPPA announces price increase of eight scheduled drugs by 50 per cent

Next Post

BREAKING | கனமழை எதிரொலி..!! இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை..!!

Tue Oct 15 , 2024
Due to heavy rain, a holiday has been announced for schools and colleges in 4 districts including Chennai tomorrow (October 16).

You May Like