fbpx

அரசு மருத்துவமனையில் அதிகரிக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை..!! பொதுமக்கள் பீதி..!!

கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து தற்போது இன்புளுயன்சா காய்ச்சல் மக்களை அச்சுறுத்தி வருகிறது. தமிழ்நாடு முழுவதும் இன்புளுயன்சா வைரஸ் பரவி வரும் நிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தக் காய்ச்சல் 4 நாட்கள் வரை பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை வெளிநோயாளிகள் மற்றும் காய்ச்சல் பிரிவில் பரிசோதனை மேற்கொள்ள பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.

குறிப்பாக, சாதாரண நாட்களில் 250 பேர் வரை காய்ச்சல் மற்றும் சளி உள்ளிட்ட பிரச்சனைகளால் சிகிச்சை எடுத்துக்கொள்ள வரும் நிலையில், கடந்த சில நாட்களாக 300-க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் காய்ச்சல் காரணமாக சிகிச்சை மற்றும் பரிசோதனைக்கு வந்து செல்கின்றனர். சுமார் 50ல் இருந்து 70 பேர் கூடுதலாக சிகிச்சைக்கு வருவதாகவும், நெஞ்சு அடைப்பு, மூச்சு விடுதலில் கடும் சிரமம் உள்ளிட்ட பிரச்சனைகள் இருந்தால் மட்டுமே இன்புளுன்யசா பரிசோதனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

பகீர்......."! தண்ணீர் ட்ரம்முக்குள் கால்! கப்போர்ட்டில் கை! பதற வைக்கும் மும்பை கொலை! அழுகிய தாயின் உடலோடு வசித்த மகள் கைது!

Thu Mar 16 , 2023
மத்திய மும்பையின் லால்பாக் பகுதியில் 24 வயது இளம் பெண் ஒருவர் தனது தாயினை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த சம்பவம் நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ரிம்பிள் ஜெயின் என்ற 24 வயது பெண்மணி தனது தாயாருடன் மும்பையின் லால் பாக் பகுதியில் வசித்து வந்திருக்கிறார். கடந்த சில நாட்களாக அவரது தாயாரின் சகோதரர் தனது சகோதரியை பார்க்க வேண்டுமென ரிம்பிள் ஜெயின் இடம் கூறியுள்ளார். அவர் […]

You May Like