நாடு முழுவதும் இயக்கப்பட்டு வரும் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கை 4-ல் இருந்து இரண்டாக குறைக்கப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே பல மாநிலங்களில் முன்பதிவில்லா பெட்டிகளில் இடமில்லை என்றும் இதனால் முன்பதிவு செய்த பெட்டிகளில் பலர் பயணிக்கிறார்கள் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.
அதுவும் குறிப்பாக, ஏசி பெட்டிகளில் பயணிக்கும் பயணிகள் எங்கு நமது பெட்டிகும் இந்த பயணிகள் வந்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் ஜன்னல் கதவுகளை கூட மூடிவிடுகின்றனர். ரயில் பெட்டிகளில் இடம் கிடைக்காததால், ரயில்களை சேதப்படுத்தும் சம்பவங்களும் ஆங்காங்கே அவ்வபோது நடந்து வருகிறது.
இந்நிலையில் தான், ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கை 4-ல் இருந்து இரண்டாக குறைக்கப்பட்டுள்ளது. 26 ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளை குறைத்து, அதற்கு ஈடுசெய்யும் வகையில், AC 3 Tier பெட்டிகளை இணைக்க இந்திய ரயில்வே திட்டமிடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக சென்னையில் இருந்து அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாகச் செல்லும் ரயில்களின் முன்பதிவில்லாப் பெட்டிகள் இன்று முதல் குறைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.