fbpx

கோடை காலத்தில் உடலை குளுமையாக்கும் நுங்கு பால் சர்பத்…! இதை ட்ரை பண்ணுங்க….!

சுட்டெரிக்கும் கோடையில் ஏற்படும் உடல் உஷ்ணத்தை தவிர்த்து குளுமையாக வைத்துக்கொள்ள இந்த நுங்கு பால்சர்பத்தை ட்ரை பண்ணி பாருங்கள். குளிர்ச்சி நிறைந்த நுங்கில் சுவையான நுங்கு பால் தயார் செய்து குடித்து வந்தால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.இதை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்: நுங்கு, பால், சப்ஜாவிதை, பாதாம் பிசினி, சர்க்கரை, ஐஸ்கட்டி.

செய்முறை: ஒரு கப் காய்ச்சாத பாலில் ஒரு தேக்கரண்டி பாதாம் பிசின் அல்லது சப்ஜாவிதை சேர்த்து ப்ரிட்ஜில் ஒரு மணி நேரத்திற்கு ஊற வைக்கவும்.
பின்னர் தேவையான அளவு நுங்கை எடுத்து அதனை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

ப்ரிட்ஜில் உள்ள பாலை எடுத்து அதில் நறுக்கிய நுங்கு துண்டுகள் மற்றும் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும். இதில் உங்களின் தேவைக்கேற்ப ஐஸ்க்கட்டிகளை சேர்த்துக்கொண்டு குடித்து வருவதால் உடலுக்கு குளிர்ச்சி அளிக்கிறது.

Maha

Next Post

இந்தியாவுக்கு கோரிக்கை விடுத்த ஈரான்!… உலகையே உலுக்கும் போர்!… முடிவுக்கு வருமா என எதிர்பார்ப்பு!

Tue Apr 16 , 2024
Iran: காஸா முனையில் நடைபெற்றுவரும் போரை முடிவுக்கு கொண்டுவர இந்திய அரசு தொடர்ந்து பங்காற்ற வேண்டும் என்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல்லஹியான் கோரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேலும் ஈரானும் பல ஆண்டுகளாக நிழல் யுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன. இரு தரப்பில் இருந்தும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தப்பட்டபோதும், அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொள்ளாமல் இருந்தனர். இப்போது காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போரைத் தொடர்ந்து தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. சிரியா நாட்டின் தலைநகர் […]

You May Like