ஆப்ரிக்கா நாட்டை சேர்ந்த ஒருவர் இந்தியச் செவிலியரிடம் மிகவும் ஆபாசமாக பேசும் வீடியோ இணையத்தில் பகீர் கிளப்பி வருகிறது.
இந்தியா மருத்துவத் துறை மிகப் பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது. இதனால் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் சிகிச்சைக்காக இந்தியா வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அப்படி வரும் நோயாளிகள் சிகிச்சை முடிந்து பிறகு சொந்த நாட்டிற்குத் திரும்புவார்கள். ஆனால், அப்படி நோயாளிகளில் வரும் சிலர், நமது செவிலியர்களிடம் நடந்து கொள்ளும் விதம் மிக மோசமாக இருக்கிறது.
அப்படியொரு மோசமான சம்பவம் குறித்த வீடியோ தான் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இருப்பினும், அந்த வீடியோவில் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஒருவர் தனக்குச் சிகிச்சை அளிக்கும் செவிலியர் ஒருவரிடம் ஆபாசமாகப் பேசி அதை வீடியோவாகவும் எடுத்துள்ளார். அவரது அசிங்கமான மற்றும் ஆபாசமான பேச்சு அனைத்தும் அந்த வீடியோவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ எங்கே எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்த தகவல்கள் இல்லை.
அந்த வீடியோவில், ஆப்பிரிக்காவைச் சேர்ந்த அந்த நபர் செவிலியரிடம், “உனக்கு ஆப்பிரிக்கா பிடிக்கும்.. ஆப்பிரிக்கா நன்றாக இருக்கும்” என்கிறார். அதற்கு அந்த செவிலியர், “இல்லை.. எனக்கு ஆப்பிரிக்கா பிடிக்காது” எனச் சொல்கிறார். தொடக்கத்தில் அந்த வீடியோ நோயாளி- செவிலியர் இடையே நடக்கும் கேஷ்வல் உரையாடல் போலவே இருந்துள்ளது. இருப்பினும், சில நொடிகளில் அது அப்படியே ஆபாச பேச்சாக மாறியிருக்கிறது.
அந்த நோயாளி, “எனது ஆடைகளைக் கழற்றினால்.. நீ ஆப்பிரிக்கர்களை விரும்பத் தொடங்குவாய் என நினைக்கிறேன்” என்கிறார். இது அத்துடன் நிற்கவில்லை. அந்த நோயாளியின் ஆபாச பேச்சு மேலும் தொடர்ந்துள்ளது. இந்தியா நல்லா இல்லை என்று அந்த நோயாளி மீண்டும் கூறுகிறார். அதற்கு அந்த செவிலியர், “இந்தியா நல்லா இல்லை எனச் சொல்கிறீர்கள். ஆனால், உங்கள் சிகிச்சை மட்டும் இந்தியா வந்துள்ளீர்களே” என்று பதிலடி கொடுத்துள்ளார். அதற்கு அவர், “இந்தியா சிகிச்சைக்கு நல்ல நாடு தான்.. ஆனால், படுக்கைக்கு இல்லை” என்று ஆபாசமாகப் பேசியுள்ளார்.
மேலும், இரவில் படுக்கைக்கு வந்தால் ஆப்பிரிக்கா எவ்வளவு வலிமையானது என்பதைக் காட்டுவதாகவும் அந்த நோயாளி ஆபாசமாகப் பேசியுள்ளார். இவ்வளவு மோசமாகவும் ஆபாசமாகவும் பேசிய போதிலும், அந்த செவிலியர் அமைதியாக இருந்தார். நோயாளி பேசியதைக் கண்டு கொள்ளாமல் தனது பணிகளைச் செய்தார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வரும் நிலையில், அந்த செவிலியரை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இவ்வளவு மோசமாகவும் கீழ்த்தரமாகவும் பேசிய போதிலும் அமைதியாகத் தனது கடைமையைச் செய்த செவிலியரைப் பாராட்டியே தீர வேண்டும் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
Read More : Court | ‘இதே நடைமுறையை சாதாரண வழக்குகளில் பின்பற்றுவீர்களா’..? தங்கம் தென்னரசு வழக்கில் நீதிபதி கேள்வி..!!