fbpx

ஆபாச வீடியோ படப்பிடிப்பு..!! அதிர்ந்து போன அதிகாரிகள்..!! சொகுசு படகில் நடந்த பயங்கரம்..!!

அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் நன்டூகெட் என்ற குட்டி தீவு அமைந்துள்ளது. இங்கு அமெரிக்க போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, பெண் ஒருவர் அங்கிருந்த சொகுசு படகில் இருந்து உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருந்தார்.

இதனை பார்த்த அதிகாரிகள் அந்த படகை சோதனை செய்தனர். அதில், ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருட்கள் குவித்து வைக்கப்பட்டிருப்பதாகவும், வார இறுதி பார்ட்டிக்கு பின்னர் ஆபாச படங்கள் இங்கு எடுக்கப்படுவதாகவும் அந்த பெண் தகவல் அளித்துள்ளார். தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், சொகுசு படகில் இருந்து 3 கிராம் Cocaine, 14 கிராம் Ketamine , துப்பாக்கிகள், தோட்டாக்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

ஆபாச காட்சிகளை படமாக்குவதற்காக சொகுசு படுக்கை அறையும் படகுக்குள் வடிவமைக்கப்பட்டிருந்தது. விசாரணையில் இந்த படகின் உரிமையாளர் ஸ்காட் புர்கே என்பவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார். அவர் மீது போதைப் பொருள், ஆயுதம் கடத்துதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.

இதற்கிடையே, நீதிமன்றத்தில் தன் மீதான புகார்களை புர்கே மறுத்துள்ளார். 69 வயதாகும் தனக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதாகவும், தன்னை சிறையில் அடைத்தால் தனது நிலைமை மேலும் விபரீதம் அடையும் என்றும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இவர் மீது ஏற்கனவே சட்ட விரோதமாக ஆயுதங்களை வைத்திருந்தது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. தொடர் விசாரணையில் இன்னும் பல முக்கிய தகவல்கள் வெளிவரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Chella

Next Post

ரசிகர்களே..!! முதல் ஆசிய கோப்பை பற்றி தெரியுமா..? பலருக்கும் தெரியாத சுவாரஸ்ய தகவல்கள்..!!

Sun Sep 17 , 2023
இப்போதுள்ள இளம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு 2000-க்கு முன் நடந்த கிரிக்கெட் போட்டிகளைப் பற்றி அதிகம் தெரிய வாய்ப்பில்லை என்பதால், முதல் ஆசிய கோப்பை தொடரில் இருந்தே தொடங்குவோம். முதல் ஆசிய கோப்பை தொடர் 1984இல் நடந்தது. ஒருநாள் போட்டிகளாக நடந்த இந்த புதிய தொடரில், 3 ஆசிய நாடுகள் மட்டுமே பங்கேற்றன. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் ஆகிய 3 நாடுகள் ரவுண்டு ராபின் முறையில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியோடு […]

You May Like