ஆந்திர மாநிலம் ஏலூரு மாவட்டம், ஜங்கா ரெட்டி பகுதியில் வசித்து வருபவர் சசி. இவருக்கு 3 குழந்தைகள் உள்ள நிலையில், கணவருடன் கொண்ட கருத்து வேறுபாடு காரணமாக, சசி தனியாக குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், சசிக்கு அதே பகுதியைச் சேர்ந்த பவன் என்பவருடன் அறிமுகமான நிலையில், நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதல் மலர்ந்துள்ளது.
இதனால், இருவரும் ஒருகட்டத்தில் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். ஆனால், சசியின் குழந்தைகள் உல்லாச வாழ்க்கைக்கு இடையூறாக இருப்பதாக பவன் நினைத்துள்ளார். இதனால், அவர் அந்த குழந்தைகளை கொடுமைப்படுத்த தொடங்கியுள்ளார். குழந்தைகளை கடுமையாக தாக்குவது, மிளகாய்பொடி கலந்த சாதத்தை தருவது, காயமடைந்த இடத்தில் மிளகாய்பொடி வைத்து குழந்தைகளின் கண்ணீரை ரசிப்பது என அரக்கத்தனமாக இருந்துள்ளார்.
பவனின் செயல் எல்லை மீறிய நிலையில், செல்போன் சார்ஜர் ஒயரைக் கொண்டு கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் அக்கம் பக்கத்தினர் குழந்தைகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, தகவல் அறிந்து போலீசார், குழந்தைகளின் விசாரணை நடத்தி, மேற்கூறிய தகவலை வாக்குமூலமாக பெற்று, அந்த கொடூர நபரை கைது செய்தனர். மேலும், பவன் தாக்கும்போது, சசியும் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்துள்ளார்.