நீங்கள் இந்திய அரசு வங்கியின் டெபிட் கார்டைப் பயன்படுத்தினால், உங்களுக்கான செய்தி தான் இது. ஏனெனில், அக்.31ஆம் தேதிக்கு பிறகு BOI டெபிட் கார்டு பயனற்றதாகிவிடும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் கார்டில் இருந்து எந்தப் பரிவர்த்தனையும் செய்யவோ அல்லது ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்கவோ முடியாது. இதனை தவிர்க்க அரசு வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய தகவல்களை அளித்துள்ளது.
பேங்க் ஆஃப் இந்தியா வாடிக்கையாளர்களுக்கு ட்வீட் மூலம் முக்கிய தகவல்களை அளித்துள்ளது. வங்கி வெளியிட்டுள்ள செய்தியில், BOI இன் மதிப்பிற்குரிய வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு முக்கியமான தகவல். அன்புள்ள வாடிக்கையாளரே, ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களின்படி, டெபிட் கார்டு சேவைகளைப் பெற செல்லுபடியாகும் மொபைல் எண் கட்டாயம்.
டெபிட் கார்டு சேவைகள் மூடப்படுவதைத் தவிர்க்க, தயவுசெய்து உங்கள் கிளைக்குச் சென்று 31.10.2023க்கு முன் உங்கள் மொபைல் எண்ணைப் புதுப்பிக்க/பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். நீங்கள் BOI இன் வாடிக்கையாளராக இருந்து, வங்கியின் டெபிட் கார்டைப் பயன்படுத்தினால், தாமதமின்றி கிளைக்குச் சென்று உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்யவும் அல்லது புதுப்பிக்கவும். இல்லையெனில் உங்கள் டெபிட் கார்டை உங்களால் பயன்படுத்த முடியாது.
வங்கியில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை ஆன்லைனில் அல்லது ஏடிஎம் மூலமாக மாற்ற முடியவில்லை என்றால், நேரடியாக வங்கிக் கிளைக்குச் சென்று இந்த வேலையை முடிக்கலாம். இதற்காக, நீங்கள் கிளைக்குச் சென்று, மொபைல் எண்ணை மாற்றுவதற்கான படிவத்தை நிரப்ப வேண்டும். அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை நிரப்ப வேண்டும். அதனுடன், பாஸ்புக் மற்றும் ஆதார் அட்டையின் புகைப்பட நகலும் சமர்ப்பித்து, படிவத்தை பூர்த்தி செய்த பிறகு, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மாறும்.