பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் தினமும் சில பகுதிகளில் மின்சாரம் நிறுத்தி வைக்கப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்(TANGEDCO) அறிவித்துள்ளது. இந்த பராமரிப்புப் பணியின் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வெட்டு ஏற்படும், பணிகள் முடிந்தால் மதியம் 2 மணிக்குள் விநியோகம் தொடங்கும். அதன் அடிப்படையில் இன்று பெரம்பூர், ஆவடி, திருவேற்காடு பகுதிகளின் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
பெரம்பூர் பகுதி: ஹரிதாஸ் மெயின் ரோடு, ஹரிதாஸ் 1, 2 மற்றும் 3வது தெருக்கள், பெரியார் நகர், பாரதி நகர்.
ஆவடி பகுதி: புழல் அம்பத்தூர், புழல் ரோடு, காமராஜ் நகர், சிவசக்தி நகர், 60 மற்றும் 40 ஆதி ரோடு, அந்தோனி நகர், லேக் சைட் அடுக்குமாடி குடியிருப்பு, சிதம்பரம் நகர், ஜோதி நகர், நாகம்மை நகர்.
திருவேற்காடு பகுதி: காவேரி நகர், மேத்தா மருத்துவமனை, பி.எச். ரோடு, கோ ஆபரேட்டிவ் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.