பிரபல ஒடியா திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை திலோத்தமா குந்தியா காலமானார்.
பிரபல ஒடியா திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை திலோத்தமா குந்தியா புவனேஸ்வரில் உள்ள மருத்துவமனையில் புதன்கிழமை மாலை காலமானார். அவருக்கு வயது 49. குந்தியா அக்டோபர் 5 ஆம் தேதி புவனேஸ்வரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் அவர் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவருக்கு கணவர் ஹிமான்சு சமல் மற்றும் தேவிகா அருந்ததி சமல் மற்றும் அனுபூதி சமல் ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். தேவிகா அருந்ததி ஒடியா திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி துறையில் முன்னணி நடிகையாக உள்ளார். அதே வேளையில், கணவர் ஹிமான்ஷு இயக்குனர், எழுத்தாளர் மற்றும் உரையாடல் எழுத்தாளர் ஆவார்.