ஒடிசா விபத்து ஏற்பட்டதிற்குத் தவறான சிக்னல் கொடுத்தது தான் காரணம் என ரயில்வே பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
ஒடிசா மாநிலம் பாலசோரில் சென்னை நோக்கி வந்த கோரமண்டல் ரயில் உட்பட அடுத்தடுத்து மூன்று ரயில்கள் கடந்த மாதம் விபத்துக்கு உள்ளானது, இந்த கோர விபத்தில் 300-க்கும் மேற்பட்ட பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிபிஐ விசாரணையானது நடைபெற்று வருகிறது. விபத்து ஏற்பட்டதிற்குத் தவறான சிக்னல் கொடுத்தது தான் காரணம் என ரயில்வே பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
ஒடிசா ரயில் விபத்து ஏற்பட்டதிற்குத் தவறான சிக்னல் கொடுத்தது தான் காரணம். ஒரே நேரத்தில் 2 ரயில்கள் இயக்க சிக்னல் கொடுக்கப்பட்டது. இதை உரியமுறையில் ரயில் நிலைய மேலாளர் கவனித்து இருந்தால் இந்த கோர வியத்தைத் தவிர்த்து இருக்கலாம் என ரயில்வே பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.