fbpx

ஒடிசா ரயில் விபத்து..!! முன்கூட்டியே எச்சரித்த ரயில்வே உயர் அதிகாரி..!! விழித்துக் கொள்ளாத மத்திய அரசு..!!

கர்நாடகாவில் பிப்ரவரி 8 ஆம் தேதி நிகழ்ந்த சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் சம்பவத்தில் இருந்து மத்திய அரசு விழித்துக்கொள்ளாதது தான் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்துக்கு காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

கர்நாடக மாநிலத்தில் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் சென்ற போது இண்டர்லாக்கிங் அமைப்பு செயல்பாட்டில் இருந்ததால் ஓட்டுனர் கடைசி நிமிடத்தில் ரயிலை நிறுத்தி விபத்தை தவிர்த்திருக்கிறார். இது தென் மேற்கு ரயில்வேயின் தலைமை மேலாளர் ஹரி சங்கர் வர்மாவின் கடிதம் வாயிலாக உறுதியாகியுள்ளது. அந்த கடிதத்தில், இண்டர்லாக்கிங் சிஸ்டத்தை வலுப்படுத்த வேண்டியதின் அவசியம் குறித்து அவர் எச்சரித்திருக்கிறார். இதை உடனடியாக கவனத்தில் கொண்டு அரசு செயல்படுத்தாததே தற்போது 275 உயிர்கள் பறிபோனதற்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த கடிதத்தை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள நிலையில், தற்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் செய்தி தொடர்பாளர் சாகேத் கோகாலும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், இத்தனை உயிர்கள் பறிபோனதற்கு ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவின் அலட்சியமே காரணம் எனவும் சாகேத் கோகல் குற்றம் சாட்டியுள்ளார்.

Chella

Next Post

புல்லட் ரயில் வேண்டாம், பாதுகாப்பு தான் வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

Mon Jun 5 , 2023
இந்தியாவில் புல்லட் ரயில் கொண்டு வருவதை விட நிதி ஒதுக்கி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் தொழில்நுட்பத்தை கொண்டு வரவேண்டியது தான் முக்கியம் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தருமபுரியில் கடந்த 15 நாட்களாக கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்றது. பல அணிகள் கலந்து கொண்ட இந்த தொடரின் இறுதிப்போட்டியை அன்புமணி ராமதாஸ் கிரிக்கெட் விளையாடி தொடங்கி வைத்தார். போட்டி முடிந்த பிறகு வெற்றி பெற்ற அணிகளுக்கு […]

You May Like