fbpx

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு!… நீதிமன்றம் அதிரடி!

லஞ்சம் வாங்கி கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு டிசம்பர் 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல்லில் அரசு மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் பெற்ற லஞ்சப் பணத்துடன் கைது செய்யப்பட்ட அமலாக்கத் துறை அதிகாரி அன்கித் திவாரி கடந்த 1 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு அமலாக்கத்துறை அதிகாரி அன்கித் திவாரி ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறை அனுமதி கோரியது. எனினும், 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் 3 நாள் காவல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், அங்கித் திவாரியை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, அங்கித் திவாரியை வரும் 28-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க திண்டுக்கல் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. 28-ம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் கோர்ட்டு உத்தரவிட்டது.

Kokila

Next Post

MBA படித்த நபர்களுக்கு BOB வங்கியில் வேலைவாய்ப்பு அறிமுகம்...! விண்ணப்பிக்க கடைசி நாள்...?

Fri Dec 15 , 2023
பேங்க் ஆப் பரோடா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Business Head – Gold Loan பணிகளுக்கு என ஒரு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 50 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு அனுபவம் பொறுத்து மாத ஊதியம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் […]

You May Like