போக்குவரத்து துறை தகவல் உரிமை சட்டத்தின் மூலம் கேட்கப்படும் கேள்விகளுக்கு அனைத்து அலுவலர்களுக்கும் முறையாக பதில் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து போக்குவரத்து துணை இணை ஆணையர் வெங்கட்ராமன் அனைத்து மாவட்ட பொது தகவல் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் போக்குவரத்து துறை தகவல் உரிமை சட்டத்தின் மூலம் கேட்கப்படும் கேள்விகளுக்கு அனைத்து அலுவலர்களுக்கு முறையாக பதில் அளிக்க வேண்டும் என அனைத்து அலுவலர்களுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம், மத்திய அரசால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களிடமிருந்து மக்கள் உரிமையுடன் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக உருவாக்கப்பட்ட சட்டம் ஆகும். இச்சட்டம் 2004 டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டு 2005 மே 11, அன்று, மக்களவையிலும், 2005 மே 12, அன்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. 2005 ஜுன், 15 அன்று குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டது. 2005 ஜுன் 21, அன்று அரசுப் பதிவிதழில் வெளியிடப்பட்டு 2005 அக்டோபர் 12, அன்று முதல் நடைமுறைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.