fbpx

தரதரவென இழுத்துச் சென்ற அதிகாரிகள்..!! தலையில் காயம்..!! மனித உரிமை ஆணைய உறுப்பினரிடம் போட்டுக்கொடுத்த செந்தில் பாலாஜி..!!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்து விவரங்களைக் கேட்டறிந்த மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், செய்தியாளர்களிடம் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

அமலாக்கத் துறையினர் செவ்வாய்க்கிழமை நடத்திய சோதனையை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவர் வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, அமலாக்கத்துறை சோதனையின் போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்படவே அவர் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்த போது, மனித உரிமை மீறல்கள் நடந்ததாகச் செய்திகள் வெளியாகின. இதையடுத்து, மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்து விவரங்களைக் கேட்டறிந்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது, அப்போது மனித உரிமை மீறல்கள் நடந்ததாக வெளியான தகவல் அடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் சார்பாகச் செந்தில் பாலாஜியிடம் விசாரிக்க வந்துள்ளதாகத் தெரிவித்தார். செந்தில் பாலாஜிக்குத் தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாக அவரே கூறினார் என்றும் அமலாக்கத் துறையினர் தன்னிடம் கடுமையாக நடந்து கொண்டதாகவும் செந்தில் பாலாஜி கூறினார்.

கைது செய்த போது தன்னை தரதரவென இழுத்துச் சென்றதாகவும் அப்போது தலையில் காயம் ஏற்பட்டதாகவும் கூறினார். மேலும், தன்னை தாக்கிய அதிகாரிகள் பெயரையும் செந்தில் பாலாஜி குறிப்பிட்டுள்ளார் என்று கண்ணதாசன் கூறினார். மாநில மனித உரிமை ஆணையத்திற்குத் தானாகச் சென்று விசாரணை நடத்த உரிமை உள்ளது என்றும் கண்ணதாசன் தெரிவித்தார்.

Chella

Next Post

பிபர்ஜாய் புயல்…..! கர்நாடக கடலோரப்பகுதிகளில் கனமழை எச்சரிக்கை…..!

Thu Jun 15 , 2023
அரபிக் கடல் பகுதியில் ஏற்பட்ட பிபர்ஜாய் புயல் குஜராத்தின் ஜக்காவ் துறைமுகம் அருகே இன்று மாலை கரையை கடக்கிறது. இதனால் கடலோர பகுதிகளில் மிக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தான் கர்நாடக மாநிலத்தின் கடலோர மாவட்டங்களான உடுப்பி, தட்சிண கன்னடா உத்தர கன்னடா போன்ற 3 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இந்த புயலின் காரணமாக, ஜூன் மாதம் […]

You May Like