மனைவி மாமியார் வீட்டில் இருந்து வராததால், கணவர் தனது அந்தரங்க உறுப்பை வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் மாதேபூர் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கிருஷ்ண பாசுகி என்பவர் அனிதா என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், குடும்பத்தை விட்டு விலகிய கிருஷ்ணா, பஞ்சாப் மாநிலம் மண்டியில் வேலை பார்த்து வந்துள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன்புதான் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகள் இல்லை. மாமியார் வீட்டுக்குச் சென்று மனைவிக்காகக் காத்திருந்ததால் ஆத்திரமடைந்த கிருஷ்ணா, திடீரென கத்தியால் தனது அந்தரங்க உறுப்பை வெட்டிக்கொண்டார். இதுகுறித்து பேசிய கிருஷ்ணாவின் நண்பர், கடந்த ஜனவரி 20ஆம் தேதியன்று அவரது மனைவி தனது பெற்றோரின் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, தனது அந்தரங்க உறுப்பை வெட்டினார்.

அக்கம் பக்கத்தினர் கிருஷ்ண பாசுகியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது அபாய கட்டத்தை தாண்டிவிட்டார். அவரது உடல்நிலை தற்போது சீராக இருக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.